மூலிகைப் பெயர்........................................தும்பை
மாற்றுப் பெயர்கள்...................................xxxxxxxxx
தாவரவியல் பெயர்......................LEUCAS
ASPERA
ஆங்கிலப் பெயர்..........................LEUCUS
ASPERA
சுவை..............................................................இனிப்பு
தன்மை.........................................................வெப்பம்
===================================================
01. தும்பையானது எதிரடுக்கில் அமைந்த கூரான நீண்ட கரும்பச்சை இலைகளையும் நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளையும், பாத வடிவிலான தேன் நிறைந்த வெண்மை நிறச் சிறு மலர்களையும் உடைய சிறு செடி.
02. தும்பை இலை, பூ ஆகியவை மருத்துவப் பயன் உடையவை. இலை கோழை அகற்றியாகவும் உடல் உரம் பெருக்கியாகவும் வாந்தி உண்டாக்கும் மருந்தாகவும் பயன்படும். தும்பைப் பூ முறை நோய் அகற்றும் மருந்தாகும்.
03. தும்பையில் சிறு தும்பை, பெருந்தும்பை அல்லது ஆனைத்தும்பை என இரு வகை உள்ளன..
04. பாம்புக்கடி நஞ்சாலுண்டான
மூர்ச்சையினின்றும் உணர்ச்சி பெற, தும்பைப் பூவைச்
சாறு பிழிந்து மூக்கில் விடுவதுண்டு. இதன்பின் இலையை அரைத்து உள்ளுக்குக் கொடுத்து, இலைச் சாற்றைக் கடிவாயிலும் விட நஞ்சு நீங்கும்.
05. தும்பைப் பூவின் சாற்றை தொடர்ந்து இரு வேளை வீதம் இரண்டு நாள் கொடுத்தால்
நீர்க் கோவை நீங்கும்.
06. தீராத் தலைவலிக்கு தும்பைப் பூவின் சாற்றை இரண்டு துளி மூக்கிலிடலாம்.தலைவலி நீங்கும்.
07. தும்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலை முழுகி வர,
தலைப் பாரம், ஒற்றைத் தலை வலி, நீரேற்றம், மூக்கடைப்பு
நீங்கும்.
08. தும்பைச்சாறு 15 மி.லி தேனில் கலந்து கொடுத்துக் கொட்டு வாயில் இலையை அரைத்துக் கட்டினால் தேள் நஞ்சு இறங்கும்.
09. தும்பை இலை, உத்தாமணி இலை சமனளவு எடுத்து அரைத்து, சுண்டைக் காயளவு பாலுடன் சாப்பிட்டு, புளி, காரம் நீக்க உதிரச்சிக்கல், தாமதித்த மாதவிடாய் நீங்கும். (1403)
10. தும்பை இலைச் சாறு, திருநீற்றுப் பச்சிலைச் சாறு இரண்டையும் கலந்து, அத்துடன் சிறிது பச்சைக் கற்பூரமும் சேர்த்து, கலக்கி, அதை சுவாசித்து வந்தால், தலை வலி தீரும். (401)
11.
\தும்பை இலைச் சாறினை எடுத்து, கடி வாயில் தடவினால், பூரான் கடி விஷம் இறங்கும். (866)
12.
தும்பை
இலைச் சாறு எடுத்து மூன்று வேளை தலா 30 மி.லி வீதம் அருந்தி வந்தால் சிலந்திக் கடி குணமாகும். (869)
13.
தும்பை
இலைச் சாறு எடுத்து சிறிது
தேன் கலந்து கடிவாயில் பூசினால் தேள் கடி விஷம் இறங்கும். கடுப்பும் தீரும். (890)
14.
தும்பை
இலைச் சாறு எடுத்து 50 மி.லி உட்கொண்டால் தேள் கடி,
பாம்புக் கடி விஷம் முறியும். (900)
(1265)
15.
தும்பை
இலைச் சாறு 100 மி.லி. எடுத்து, முற்றிய வாழை மரத்தின் அடிவாழைத் தண்டின் சாறு 100 மி. லி. எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலக்கிச் சாப்பிட்டால் பாம்பின் விஷம் முறியும். (899)
16.
தும்பை
இலை, கரிசலாங்கண்ணி இலை, கீழாநெல்லி இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவு மோரில் கலக்கி காலை மாலை கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை தீரும். (1086)
17.
தும்பை
இலைகளை அரைத்து. அந்த விழுதைத் தலையில் பற்றுப் போட்டும், அரைத்த கரைசலை 3 நாட்கள் உள்ளுக்குச் சாப்பிட்டும் வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். (1088)
18.
தும்பை
இலை, வெந்தயம் சேர்த்து அரைத்து தலையில் பற்றுப் போட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். (1090)
19.
தும்பை
இலை, கையாந்தரை இலை, அம்மான் பச்சரிசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து
அரைத்து, சிறிது தேன் கலந்து எலுமிச்சங்காய் அளவுக்கு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். (1093)
20.
தும்பை
இலைச் சாறினைப் பாம்பு கடித்தவர்களுக்குக்
கொடுத்து குடிக்க வைக்க வேண்டும். குடித்தவுடன் பேதியாகும். மூன்று நாள் தூங்காமல் இருக்க வேண்டும். உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். (1400)
21.
தும்பை
இலைச் சாறைத் தேனில் கலந்து கொடுத்தால் தேள் கடி விஷம் இறங்கும். (1401)
22.
தும்பை
இலை. உத்தாமணி இலை சமனளவு எடுத்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாமதித்த மாதவிடாய் நீங்கும். ( புளி பத்தியம் ) (1403)
23.
தும்பைப்
பூச் சாறினை தினசரி கண்ணில் விட்டு வந்தால் கண் புரை நீங்கும். (043)
24.
தும்பைப்
பூவை நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலை பாரம் நீங்கும். (929)
(1122) மண்டையில் நீரேற்றம் தீரும் ((1404)
25.
தும்பை
வேர், வேளை இலை, வெங்காயம் சேர்த்து அரைத்து வைத்துக்
கட்டி வந்தால் மூலம், பௌத்திரம் ஆகியவை குணமாகும்.
(372)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
===================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)09]
{23-05-2021}
===================================================
தும்பை |
தும்பை |
தும்பை |
தும்பை |
தும்பை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக