இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 22 மே, 2021

தான்றிக்காய்

 

       மூலிகைப் பெயர்....................................தான்றிக் காய்

       மாற்றுப் பெயர்கள்.............................அமுதம், அட்சம்,   

       ..................................அக்கந்தம்,எரிகட்பலம், ஆராமம்,

       .........................வாந்தியம்கந்தகட்பலம்,களத்தூன்றி  

       ..................... ..........................தாணிக்காய். தானிக்காய்,

       தாவரவியல் பெயர்.............TERMINALIA BELLERRICA

       ஆங்கிலப் பெயர்.........................BELERIC MYROBALAN

==================================================

 

01.   இது உறுதியான வேர்களுடன் கூடிய பெரிய மர வகை. நெருடலான மணத்துடன் சிறிய காம்புகளில் காணப்படும் இலைகள் பெரியவை. உருண்டை வடிவிலான ஐந்து பள்ளங்களைக் கொண்ட காய்கள் காணப்படும். (Asan)

 

02.   இம்மரத்தின் இலை பழம் இரண்டும் மருத்துவக் குணம் உடையவை. துவர்ப்புச் சுவை கொண்டது. (Asan)

 

03.   தான்றிக் காய்தோலை உரித்துப் பொடி செய்து கால் கரண்டி எடுத்து தேனில் குழைத்து காலையில் சாப்பிட்டு வர, கண் பார்வை கூர்மையாகும். (Asan)

 

04.   தான்றிக் காய்த் தூளைச் சிறிதளவு எடுத்து பல் துலக்கி வந்தால், பல் வலி குறையும். (Asan)

 

05.   தான்றிகாய்த் தோலைத் தண்ணீரில் போட்டு ஊறவிட்ட பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி தணியும். அல்லது தான்றிக் காயைச் சுட்டுப்பொடி செய்து, பல் துலக்கினாலும் பல் வலி, ஈறு நோய் குறையும். (Asan)

 

06.   தான்றிக்காய், கிராம்பு, தாளிசபத்திரி தலா 100 கிராம் எடுத்து பொடித்து, பல் துலக்கி வந்தால், பல் வலி, பல் கூச்சம் தணியும். (Asan)

 

07.   தான்றிகாய்ப் பொடியில் சிறிதளவு வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வாதம் கட்டுப்படும். (Asan)

 

08.   தான்றிகாயைப் பொடித்து தேனில் கலந்து உட்கொண்டால், மார்பு வலி, இருமல், தணியும். அம்மை நோய்க்கும் நிவாரணமாகும். (Asan)

 

09.   தான்றிக் காயை நீர் விட்டு அரைத்துப் பசையாக்கி புண், சிரங்கு உள்ள இடங்களில் பூசி வரலாம். (Asan)

 

10.   தான்றிக் காய்ப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவுக்கு  எடுத்து நீரிலோ, தேனிலோ ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும். (Asan)

 

11.   தான்றிக் காய்ப் பொடியுடன் சிறிதளவு கடுக்காய், நெல்லிக்காய், நீர்முள்ளி ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் வராது. (Asan)

 

12.   தான்றியின் இளந்தளிர்களைப் பறித்து சாறு பிழிந்து, மூன்று வேளை குடித்தால் தொண்டைகட்டு, கோழை சீராகும். (Asan)

 

13.   தான்றிக் காய்ப் பொடியுடன் சம அளவு சர்க்கரை சேர்த்து  வெந்நீரில் கலந்து காலை மாலை குடித்தால் பித்தம் சீராகும். (Asan)

 

14.   தான்றிகாய்த் தோலை வறுத்துப் பொடி செய்து , தேன் கலந்து காலை மாலை இரு வேளை சாப்பிட்டால் இரத்த மூலம் நிற்கும். (Asan)

 

15.   தான்றிக்காய், நிலப்பனை, பூனைக்காலி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து ஐந்து  கிராம் அளவுக்கு எடுத்து காலை மாலை இரு வேளையாக பசும் பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் பலப்படும். (Asan)

 

16.   தான்றிக் காய், திப்பிலி இரண்டையும் பாலில் ஊற வைத்து உலர்த்தவும். மிளகு மற்றும் தோல் நீக்கிய சுக்கை மிதமாக வறுக்கவும். இவை அனைத்தையும் இடித்து தூளாக்கிச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். (Asan)

 

17.   தான்றிக்காய், தேற்றான் கொட்டை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக வறுத்துப் பொடி செய்து ஐந்து கிராம் வீதம் காலை மட்டும் சாப்பிடுங்கள். உள்மூலம், வெளிமூலம், இரத்தமூலம் ஆகியவை சீராகும். (Asan)

 

18.   தான்றிக் காய், கடுக்காய், நெல்லிக்காய், தென்னம் பாளை ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து காலை மற்றும் இரவு உணவுக்கு முன் 2 கிராம் சாப்பிடலாம். குடல் புண் ஆறும். (Asan)

 

19.   தான்றிக் காய், கடுக்காய், நெல்லிக் காயை சம அளவு எடுத்து பொடித்து உபயோகிப்பது தான்திரிபலா சூரணம்உலக அளவில் பிரசித்தி பெற்ற மருந்து. (Asan)

 

20.   திரிபலா சூரணத்தை நீரில் இட்டுக் கலக்கி புண்களில் ஊற்றிக் கழுவலாம். புண்கள் ஆறும். (Asan)

 

21.   திரிபலா சூரணத்தை சிறிதளவு எடுத்து நீரிலிட்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் இராது. (Asan)

 

22.   திரிபலாசூரணத்தை நீரில் இட்டுக் கலக்கி வெறும் வயிற்றில் சிறிதளவு குடித்து வந்தால் உடல் எடை குறையும். (Asan)

 

23.   தான்றிகாய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. (Asan)

 

24.   பாதி பழுத்த தான்றிப் பழங்கள் பேதி மருந்தாகப் பயன்படுகிறது. (Asan)

 

25.   மரத்தின் பட்டை துணி, தோல் ஆகியவற்றில் சாயம் ஏற்றப் பயன்படுகிறது. (Asan)

 

26.   இலைகள் கறவை மாடுகளின் தீவனமாகப் பயன்படுகிறது. இத்தீவனம் பால் பெருக்கத்திற்கு உதவுகிறது. (Asan)

 

27.   தான்றிக் காயின் உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு மேல் தோலை மட்டுமே மருத்துவத்திற்குப் பயன் படுத்த வேண்டும் - கடுக்காய் போல. (Asan)

 

28.   (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான் 29-10-2017 நாளிட்ட இராணி வார இதலில் எழுதிய கட்டுரை.)

 

29.   தான்றிக் காயின் தோலுடன் தண்ணீர் சேர்த்து கசாயம் செய்து அதனுடன் தேன் கலந்து 60 மி.லி அருந்தி வந்தால் ஆஸ்துமா குணமாகும். (Harish)

 

30.   தான்றிக் காய் தோலின் பொடியுடன் திப்பிலிப் பொடியும் மிளகுப் பொடியும் சம அளவு கலந்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும். நுரையீரல் பலப்படும். (Harish)

 

31.   சிறு துண்டு தான்றிக் காயை வாயில் இட்டு மென்று சுவைத்தால் தொண்டைகட்டு தீரும். (Harish)

 

32.   தான்றிக் காயை வெந்நீர் கொண்டு உரைத்து புண்களின் மீது போட்டு வந்தால் அவை ஆறும். (Harish)

 

33.   தான்றிக் காயின் மேல் தோலைஎடுத்து கசாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் தீரும். (Harish)

 

34.   தான்றிக் காய், கடுக்காய், நெல்லிக் காய் ஆகியவற்றைப் பொடி செய்து பற்பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பல் இறுகும்; ஈறுகள் பலப்படும். (Harish)

 

35.   தான்றிக் காய்ப் பொடியை சிறிது எடுத்து சிலந்திக் கடிக்கு மருந்தாகத் தரலாம். (Harish)

 

36.   தான்றிக் காய்ப் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துதினமும் இரவு வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு தீரும். (Harish)

 

37.   தான்றிக் காய், அதிமதுரம், திப்பிலி சேர்த்துக் கசாயம் செய்து 60 மி.லி வரை குடித்தால் இருமல் தீரும்; செரியாமை குணமாகும். (Harish)

 

38.   (தொ.எண் 29 – 31 ஆதாரம்: வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல் மருத்துவ மனை முத்ன்மை மருத்துவ அதுலாரி, டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் அவர்கள் 27-01-2018 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

 

39.   தான்றிக் காய் தோலை உரித்து, தோலை மட்டும் பொடி செய்து கால் தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மை ஆகும். (014) கண் ஒளி பெருகும். (027)

 

40.   தான்றிக் காய், கடுக்காய், நெல்லி முள்ளி மூன்றையும் எடுத்து குடி நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் தீரும். (251)

 

41.   தான்றிக் காய்ப் பொடி இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து நாவில் தடவினால் மாரடைப்பைத் தடுக்கலாம். (975) (1939)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )08]

{22-05-2021}

==================================================


தான்றிக்காய்

தான்றிக்காய்

தான்றிக்காய்

தான்றிமரம்

தான்றிமரம்



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக