இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 26 மே, 2021

புளியமரம்

 

      மூலிகைப் பெயர்.........................................புளியமரம்

      மாற்றுப் பெயர்....................................................................

      தாவரவியல் பேயர்...............................Tamarindus indica

      ஆங்கிலப் பெயர்...............................TAMARAIND TREE

   ==================================================

 

01.   புளிய மரம் மிகுந்த பலன் தரும் மரங்களில் ஒன்று. எதிரடுக்குகளில் அமைந்த சிறிய இலைகள் இறகு போன்ற அமைப்பு உடையவை.

 

02.   புளிய மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் உடையவை.

 

03.   புளியம் பூவைப் பறித்து வந்து அரைத்து கண்ணைச் சுற்றிப் பற்றுப் போட்டால் கண்வலி தீரும். கண்சிவத்தல் குணமாகும் (041) (1501) (1973)

 

04.   புளிய இலைக் கொழுந்தைப் பறித்து கண்களின் மேல் வைத்துக் கட்டி ஒரு மணி நேரம் கழித்து எடுத்து விட்டால் கண் சிவப்பு மாறும். (031)

 

05.   புளி (பழைய புளி) சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து தேனீ கொட்டிய இடத்தில் ஒட்டி வைத்தால் கடுப்பு நீங்கும். விஷம் நீங்கும்.  (878) (885)

 

06.   புளி, உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நாக்கில் தடவி வந்தால் உண்ணாக்கு நோய் (டான்சில் நோய்) குணமாகும்.  (1304)

 

07.   புளிய இலைச் சாறு, வெங்காயச் சாறு, சுத்தமான நல்லெண்ணெய் மூன்றையும் கண்ணில் கட்டி  ( கண்ணில் விட்டு ) 10 நிமிடம் கழித்துக் குளித்தால் கிட்டப் பார்வை, தூரப் பார்வைக் குறைகள் நீங்கும்.  (026)

 

08.   புளிய இலைகளை அவித்து சூட்டோடு சூடாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் கொடுத்து, அவித்த இலைகளையும் அந்த இடத்தில் கட்டி வந்தால் சுளுக்கு குணமாகும்.  (580)

 

09.   புளியங் கொட்டைத் தோல். மாதுளம் பழத் தோல், ஆகியவற்றைச் சம அளவு எடுத்து இடித்து தூள் செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து பசும் பாலில் மூன்று வேளைகளும் சாப்பிட்டு வந்தால் சீத பேதி குணமாகும்.  (094)

 

10.   புளியங் கொட்டைத் தோல் எடுத்து இடித்து, பொடி செய்து அரைத் தேக்கரண்டி தூள் எடுத்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நீர்க் கடுப்பு  குணமாகும்.  (952)

 

11.   புளிய மரத்து சொற சொறப்புப் பட்டையை எடுத்து வந்து இடித்து நன்கு பொடியாக்கி புண்கள் மேல் தூவி, தேங்காய் எண்ணெயும் சில துளிகள் விட்டு வந்தால், ஆறாத புண்களும் ஒரு வாரத்தில் ஆறும்.  (447)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

=================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )12]

{26-05-2021} 

===================================================


புளியங்கொட்டை

புளியமரம்

புளியங்காய்

புளியங்காய்

புளியம்பழம்

புளியம்பூ



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக