மூலிகைப் பெயர்............................................புதினா
மாற்றுப் பெயர்.............................................................
தாவரவியல் பெயர்........................MENTHA
SPICATA
ஆங்கிலப் பெயர்....................................MINT
LEAVES
===================================================
01. புதினா இலையைக் காய வைத்து சம அளவு உப்பு சேர்த்து, மீண்டும் அரைத்து தூளாக்கி, பற்பொடியாகப் பாவித்து காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் நீங்கும். (241)
02. புதினாக் கீரையைச் சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், மசக்கை மயக்கம், வாந்தி ஆகியவை சரியாகும்.
(289) (2012)
03. புதினா இலைச் சாறினை எடுத்து, அத்துடன் பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கலக்கி மூட்டு வலி உள்ள இடத்தில் பூசி வந்தால், மூட்டு வலி குணமாகும்.
(313)
04. புதினா இலைகளை எடுத்து சாறு பிழிந்து, அத்துடன் தேன் கலந்து அருந்தி வந்தால் மாதவிடாய் ஒழுங்காகும்.
(597)
05. புதினாத் துவையல் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
(639) (1775)
06. புதினா இலையை மை போல் அரைத்து இரவு படுக்கப் போகும் முன் முகத்தில் தடவிக் காயவிட்டு, காலையில் எழுந்த பின் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் அனைத்தும் மறைந்து போகும்.
(835)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)12]
{26-05-2021}
புதினா |
புதினா |
புதினா விதை |
புதினா |
புதினா |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக