மூலிகைப் பெயர்...................................சிறுகண் பீளை
மாற்றுப் பெயர்கள்........................சிறுபீளை, கற்பேதி,
................................................பாஷாணபேதி, கண்பீளை,
...........................................................................பொங்கல் பூ
தாவரவியல்
பெயர்..................................AERVA
LENETA
ஆங்கிலப் பெயர்..................................AMARANTHACEA
சுவை..........................................................................கைப்பு
தன்மை...................................................................வெப்பம்
1) மாற்றடுக்கில் அமைந்த சிறிய இலைகளையும், இலைக் கோணங்களில் வெண்மையான மலர்க் கதிர்களையும் உடைய நேராக வளரும் சிறு செடி.
2) செடி முழுமையும் மருத்துவப் பயன் உடையது. சிறு நீரகக் கல்லைக் கரைக்கும் குணமுடையது.
3) இது பாண்டு, பெரும்பாடு, நீர் எரிச்சல், முப்பிணி, நீரடைப்பு, கல்லடைப்பு, குடற்சூலை, குருதிச்சூடு ஆகியவற்றைப் போக்கும்.
4) சிறு பீளையின் வேரை 20 கிராம் எடுத்து, சிதைத்து, ஒரு லிட்டர் நீரில் போட்டு 125 மி,லி யாகக்
காய்ச்சி, வடிக்கட்டி காலை மாலை 2 வேளைக் கொடுத்து வர, சிறு நீர்க் கட்டை உடைக்கும்.
5) சிறு பீளைச் செடியை வேருடன் பிடுங்கி (சமூலம்), நன்றாக அலசி 50 கிராம் அளவுக்கு
எடுத்து, ஒரு லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 100 மி.லி வீதம்
காலை மாலை இரு வேளையும் கொடுத்து வந்தால் சிறு நீரகக் கற்கள் முற்றிலுமாகக் கரைந்து விடும்.
6) சிறுநீரகத்தில் கல் உருவான பின்பு, அது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகரும்போது தான் வலி ஏற்படுகிறது. இந்த நிலையில், சிறுகண் பீளை சிகிச்சை, நிவாரணம் தர சற்று
நாளாகும். அதுவரை வலியைப் பொறுத்துக்கொள்ள வேண்டி யிருக்கும். இதைத் தவிர்க்க மாதம் ஒருமுறையாவது சிறுகண் பீளைக் கஷாயம் குடித்து வந்தால் கல் உருவாகாமல் தடுக்கலாம்.
7) சிறுகண் பீளை இலைச் சாற்றில் 50 மி.லி வீதம்
குடித்துவர பெரும்பாடு, கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல்
போகும்.
8) கஞ்சி வகைகள் ஏதாவதொன்றில் சிறுபீளைச் செடியின் வேரைச்
சேர்த்துக் காய்ச்சிக் குடித்துவர, சூல் கொண்ட பெண்களுக்கு வலுவைத்
தரும்.
9) சிறுபீளை வேர்ப் பட்டை, பனை வெல்லம் வகைக்கு 50 கிராம் எடுத்துக் கூட்டி மை போல்
அரைத்து 50 மி.லி பசுவின்
பாலில் கலந்து, காலை மாலைகளில் உட்கொண்டு வர கல்லடைப்பு, நீரடைப்பு, பெரும்பாடு
முதலியன நீங்கும்.
10) சிறுபீளை சமூலம், சிறுநெருஞ்சி, மாவிலங்கை வேர், பேராமுட்டி வேர், இவைகளைச் சமனெடை எடுத்து போதிய நீர் விட்டு, எட்டில் ஒரு பங்காய்க் காய்ச்சிக் குடித்துவரக் கல்லடைப்பு (சிறு நீரகக் கற்கள்) நீங்கும்.
11) சிறுபீளை, சிறுநெருஞ்சில் இரண்டையும் சம அளவு
எடுத்து ஒன்றாக அரைத்து சிறு உருண்டை (கோலிக் குண்டு அளவு) தயிரில் கலக்கி அருந்தி வர சிறுநீர்க்கல் கரையும்.(989)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)07]
{21-05-2021}
சிறுகண்பீளை |
சிறுகண்பீளை |
சிறுகண்பீளை |
சிறுகண்பீளை |
சிறுகண்பீளை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக