மூலிகைப் பெயர்..................................சிறியாநங்கை
மாற்றுப் பெயர்கள்.....................நங்கை, நிலவேம்பு
தாவரவியல் பெயர்..................POLYGOLA
GRINERSIS
சுவை.........................................................................கைப்பு
தன்மை..................................................................வெப்பம்
==================================================
01. இதில் சிறியா நங்கை, பெரியாநங்கை என இரு வகை உண்டு. இச்செடியை நிலவேம்பு என்றும் சொல்வதுண்டு.
02. இது உடலுக்கு வலிவைத் தரும்; அழகைத் தரும். பெண்களைத் தன் வசப் படுத்தும்.
03. இதன் இலையை அரைத்து 5 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து காலையில் உட்கொள்ள, உடல் வலுக்கும்.
04. இலையை உலர்த்திப் பொடித்து, அதே அளவுக்குச் சர்க்கரை சேர்த்து காலை மாலை இருவேளையும்
3 கிராம் எடை உட்கொண்டு வர, உடல் வலுக்கும்; அழகு பெறும்.
05. சிறியா நங்கை ( நிலவேம்பு ) நீரிழிவுக்கு
மிக அருமையான மருந்து. தினசரி இரண்டொரு இலைகளைத் தின்று வந்தாலோ அல்லது சில இலைகளைப் போட்டுக் குடிநீர் செய்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தாலோ நீரிழிவு விலகிவிடும்.
06. சிறியா நங்கைத் தழையை சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள்
பின்னும் - அறியதில்
தங்கணமும் நீறும்
தனியழகு முண்டாகும்
திங்கள்முக மாதே
தெளி ( பழைய பாடல் )
07. பாம்புக் கடிக்கு, சிறியாநங்கை இலையைக் கொடுத்து மெல்லச் சொல்லவேண்டும். நஞ்சு முறியும் வரை இலை கசக்காது. நஞ்சு முறிந்த பின்பு இலை கசக்கத் தொடங்கும்.
08. சீறியெழும் நல்ல பாம்பு, சிறியாநங்கையைக் கண்டால்
அடங்கிவிடும் என்பது முதுமொழி.
09. பாம்பும் கீரியும் சண்டையிட்ட பின், பாம்பைக் கொன்ற கீரி தனது உடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றவும், பாம்பின் நஞ்சு நீங்கவும் சிறியாநங்கைச் செடியில் விழுந்து புரளும் என்று சொல்வார்கள்.
10. சிறியா நங்கையைத் தொடர்ந்து பொடியாகவோ, கசாயமாகவோ சாப்பிட்டு வந்தால் நீரிழிவுப் பாதிப்புகள் தடுக்கப்படும்.(333)
(1891)
11. சிறியா நங்கையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் விஷ முறிவு ஆற்றலைப் பெற்று விடும்.(895)
12. சிறியா நங்கையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எது கடித்தாலும் உடம்பில் விஷம் ஏறாது. (1193)
13. சிறியாநங்கை இலையைத் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கால் பாகமாகத் தண்ணீர் குறைந்ததும் வடிகட்டி அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். (Harish)
14. சிறியாநங்கை இலைக் கசாயத்துடன், சிறிது மிளகும் தேனும் சேர்த்துக் குடித்தால் சுவாசம் சம்பந்தமான
நோய்கள் அண்டாது. (Harish)
15. நிலவேம்பு, கிச்சலித் தோல், கொத்துமல்லி விதை இவைகளுடன் நன்கு கொதிக்கும் வெந்நீரைச் சேர்த்து மூடிவைத்து ஒரு மணி நேரம் சென்ற பின் வடிகட்டி, 30 மி.லி. வீதம் 3 முறை குடித்தால் சுரங்கள் குறையும். மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியும் ஏற்படும். (Harish)
16. நிலவேம்பு சமூலத்துடன் சுக்கு, மிளகு, வெட்டி வேர், விலாமிச்சம் வேர், சந்தனம், கோரைக்கிழங்கு, பேய்ப்புடல் சமூலம், பற்படாகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர்
சேர்த்துக் கொதிக்க வைத்து தண்ணீர் கால் பாகமாகக் குறைந்த்தும் 60 மி.லி தினம் 2 முறை குடித்து வந்தால், அனைத்துவித சுரங்களும்
சரியாகும். இதனை டெங்கு போன்ற சுரங்களுக்கும் கொடுக்கலாம்.(Harish)
17. சிறியாநங்கை இலையை விஷக் கடிகளுக்கு,
கழுவிய பின் மென்று சாப்பிட, விஷம் இறங்கும். (Harish)
18. சிறியாநங்கை இலைச் சாறினை 15 மி.லி அளவுக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சலுக்குக் கொடுக்கலாம்.(Harish)
19. சிறியாநங்கை இலையை அரைத்து உடலில் ஏற்படும் அரிப்புகளுக்குப் பற்றிடலாம்.(Harish)
20. சிறியாநங்கை இலையை அரைத்து சிறிய சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டால், வயிற்றுப் புழுக்கள் அழியும்.சிறியாநங்கை இலைச் சாற்றை தினம் 15 மி. நி அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.(Harish)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக