மூலிகைப் பெயர்................................................மாதுளை
மாற்றுப் பெயர்கள்:.................மாதுளங்கம், கழுமுள்,
....................................................................................தாடிமம்
தாவரவியல் பெயர்:.........................PUNICA
GRANATUM
ஆங்கிலப் பெயர்:.....................................POMEGRANATE
==================================================
01. மாதுளை பொதுவாக வறட்சியை விரும்பும் சிறு மர வகுப்பைச் சார்ந்தது. ஆறு மீட்டர் உயரம் வரை வளரும். பூக்கள் இரத்தச் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதழ்கள் ஒழுங்கற்ற பல மடிப்புகளாகக் காணப்படும். மகரந்தத் தாள்கள் மஞ்சள் வண்ணம் கொண்டவை.
02. பழங்கள் உருண்டையானவை. ஆரஞ்சு
– சிவப்பு கலந்த நிறமானவை. விதைகள் சாறுள்ள தோலால் மூடப்பட்டிருக்கும்.
03. மாதுளையின் இலை, பூ, பூப்பிஞ்சு, பழம், விதை, பழத்தோல், மரப்பட்டை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை.
(Harish)
04. மாதுளம் பழத்தில் இரும்புச் சத்து, பொட்டாசியம், போலிக் அமிலம், நார்ச்சத்து, வைட்டமின் C, K
ஆகியவை உள்ளன.
(Harish)
05. மாதுளை இரத்த அணுக்களைப் பெருக்கும்;
புற்று நோய் வராமல் தடுக்கும்; மன அழுத்தத்தைக் குறைக்கும்; இளமையைக் காக்கும்; வயிற்று உபாதைகளைச் சீர் செய்யும்; இதயத்தைக் காக்கும்.
(Harish)
06. மாதுளம் பூ மொட்டுகளை நன்கு உலர்த்தி, பொடி செய்து, 100 மி.கிராம் அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் கொடுத்தால் இருமல் குறையும்.
(Harish)
07. மாதுளம் பூக்களையும் அருகம் புல்லையும் சம அளவு எடுத்து, காயவைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு ஒரு கிராம் அளவு எடுத்து தண்ணீரில்
கலந்து கொடுத்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும். (Harish)
08. மாதுளம் பழச் சாற்றில் தேன்கலந்து தினமும் குடித்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். (Harish)
09. தினமும், மாதுளை முத்துக்களை எடுத்து, விதையுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் தீரும்.
(Harish)
10. புனிசிக் அமிலம் மாதுளம் பழச்சாறில் சாற்றில்
இருப்பதால், உடலில் தோல் சுருக்கங்கள் எளிதில் வராமல் தடுக்கும்.
(Harish)
11. தினமும் 150 மி.லி மாதுளம் பழச்சாற்றை, தொடர்ந்து இரு வாரங்கள் பருகி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். (Harish)
12. கர்ப்பக் காலத்தில் ஏற்படும் Hyper
emesis gravidarum என்று
சொல்லக் கூடிய மசக்கைக்கு மாதுளைச் சாற்றுடன் கற்கண்டு சேர்த்துப் பாகு காய்ச்சி, அதில் பன்னீர் கலந்து வேளைக்கு ஒரு
தேக்கரண்டி வீதம் தினசரி இரு வேளைகள் பருகி வந்தால், மசக்கையினால் ஏற்படும்
வாந்தி வராமல் தவிர்க்கலாம். (Harish)
13. மாதுளம் பழத் தோலை நன்கு காய வைத்துப் பொடியாக்கி, அதற்குக் கால் பாகம் சாதிக்காய் பொடி சேர்த்து அரைத் தேக்கரண்டி அளவு
நெய் சேர்த்து தினசரி இரு வேளைகள் உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சீத பேதி குணமாகும்.
(Harish)
14. மாதுளம் பூக்கள் ஐந்தாறு எடுத்து நீரில் இட்டுக் காய்ச்சிக் குடி நீர் செய்து, கற்கண்டு சேர்த்து வேளைக்கு 60 மி.லி வீதம் தினமும் இருவேளைகள் சாப்பிட்டு வந்தால் மூலம், ஆசனக் கடுப்பு ஆகியவை தீரும்.
(Harish)
15. மாதுளம் பழத் தோல் பொடி ஒரு தேக்கரண்டி, சீரகப் பொடி அரை தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து இரண்டு மூன்று வேளைகள் உள்ளுக்குச் சாப்பிட்டால் சீதக் கழிச்சல் தீரும்.
(Harish)
16. மாதுளம் பழச்சாற்றை தினசரி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள Tryglycerides, LDL cholesterol அளவைக் குறைக்கும். (Harish)
17. மாதுளை மரப் பட்டையைப் பொடித்து 2 – 3 கிராம் அளவு எடுத்து, வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் மடிந்து விடும்.
(Harish)
18. மாதுளை விதைகளை உண்டு வந்தால் நீர்த்துப் போன விந்து கெட்டிப்படும். (Harish)
19. மாதுளை மரப் பட்டையை எடுத்து நீரில் இட்டுக் கசாயம் செய்து, வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள் இறுகும்; பற்கள் உறுதிப்படும். (Harish)
20. மாதுளம் பழத் தோல் பொடியுடன் வேலம் பட்டைப் பொடியும் சேர்த்துப் பற்பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும்.
(Harish)
21. மாதுளம் பழச் சாற்றை அருந்துவதால், உடலில் இரத்த ஓட்டம் சீராகப் பராமரிக்கப்படும். ஆகையால் மாரடைப்பு, பக்க வாதம் ஆகியவற்றின் அபாயத்தைத் தடுக்கும்.
(Harish)
22. மாதுளையில் ஃபிளவனாய்டுகள் என்று அழைக்கப்படும் உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள் (
Anti-Oxidants ) உள்ளன.
அதனால் புற்று நோய் வராமல் தடுக்கும்.
(Harish)
23. கீல்வாதம் போன்ற நோய்களைக் குறைப்பதற்கும் மாதுளை உதவும். (Harish)
24. மாதுளம் பழச் சாறு ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு செயலிழப்பை குணப்படுத்த மிகவும் உதவும். (Harish)
25. (ஆதாரம்: வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர் வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D (s) அவர்கள் 06-05-2017 தேதியிட்ட தினமலர் நாளேட்டின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)
26. அடிக்கடி மயக்கம் அடைபவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.(Asan)
27. பித்த சம்பந்தமான குறைபாடுகளுக்கு மாதுளம் பழம் மிகச் சிறந்த நிவாரணி ஆகும். (Asan)
28. மாதுளம் பழம் சளி தொடர்பான தொல்லைகளைக் குணப்படுத்தும்.
பரு வராமல் தடுக்கும். செரிமானத்தை ஒழுங்குபடுத்தும். (Asan)
29. மாதுளம் பழச் சாறு ,எலுமிச்சம் பழச் சாறு கலந்து குடித்து வந்தால், சளித் தொல்லை குணமாகும். (114)
30. மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டினால் தலைவலி – வெப்ப நோய் தீரும். மருந்தாகப் பயன் படுத்தினால், இரத்த வாந்தி – இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். (Asan)
31. மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் ஆண்மை கெட்டிப்படும். (Asan)
32. மாதுளம் பழத்தை தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
(491) (1899)
33. மூன்று நாட்கள் தொடர்ந்து மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் தீரும். (Asan)
34. மாதுளம் பிஞ்சை நன்கு அரைத்து, நீரில் கலக்கிச் சாப்பிட்டால் சீதபேதி கட்டுப்படும். (Asan)
35. மாதுளம் பழச் சாறை சிறிது சூடு படுத்தி ஓரிரு துளிகள் காதில் விட்டால், காதில் சீழ் வடிதல் நிற்கும். (Asan)
36. மாதுளம் பழச் சாறுடன் இஞ்சிச் சாறைச் சம அளவு கலந்து ஒரு தேக்கரண்டி எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட வறட்டு இருமல் தணியும். (Asan)
37. மாதுளம் பழச் சாறு, இஞ்சிச் சாறு வகைக்கு 15 மி.லி எடுத்து தேன் கலந்து வேளைக்கு 15 மி.லி வீதம் மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு தீரும்.
(121)
38. மாதுளம் பூக்களை உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டாலும் இருமல் நிற்கும். (Asan)
39. மாதுளம் முத்துக்களில் சிறிதளவு மிளகுப் பொடி கலந்து உட்கொண்டால் பித்தம் தணியும்.(Asan)
40. மாதுளம் மரப் பட்டை அல்லது வேர்ப் பட்டையைப் பச்சையாக எடுத்து, எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து, பாதியாகச் சுண்டக் காய்ச்சி, காலை நேரத்தில் 30 மி.லி அருந்தினால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் வெளியேறும். (Asan)
41. ஒரு தேக்கரண்டி மாதுளம் பழச் சாறு, அரைத் தேக்கரண்டி சந்தனம் கலந்து முகத்தில் பூசி, கால் மணி நேரம் கழித்து கழுவினால் முகப் பள பளப்பு கூடும். (Asan)
42. மாதுளம் பழச் சாறினைத் தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். (Asan)
43. மாதுளைச் சாறு ஒரு தேக்கரண்டி, பயற்ற மாவு ஒரு தேக்கரண்டி, அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு குளிக்கவும். வாரம் இரண்டு, மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால், பருக்கள் மறைந்து விடும். (Asan)
44. டெங்குக் காய்ச்சலால் அவதிப் படுவோருக்கு இரத்த்ததில் அணுக்களின் எண்ணிக்கையைக் கூட்ட மாதுளம் சாறுடன், பப்பாளி இலைச் சாறு கலந்து கொடுக்கலாம். (Asan)
45. மாதுளம் பூச்சாறு 15 மி.லி எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் இரத்த மூலத்தினால் ஏற்படும் தொல்லை நீங்கும். (Asan)
46. மாதுளம்பூச் சாறு, கற்கண்டு சேர்த்து 15 மி.லி வீதம் பருகி வந்தால் இரத்த மூலம் குணமாகும். (1517)
47. மாதுளம் பழத் துண்டைக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, அந்தத் தண்ணீரினால் கண்களைக் கழுவினால் கண் பொங்குவது நிற்கும்.(Asan)
48. மாதுளம் பழச் சாறு அருந்தி வந்தால் கர்ப்ப காலத்தில் ஏற்படும்
வாந்தியை நிறுத்தும்.
(Asan)
49. (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான், 06-03-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)
50. மாதுளம் பழச்சாறு, அறுகம்புல் சாறு சம அளவு கலந்து, வேளைக்கு 30 மி.லி வீதம் 3 வேளைகள் சாப்பிட்டால் மூக்கில் இரத்தம் வருதல் நிற்கும். (136)
(140) (1538)
51. மாதுளம் பழச் சாறினை ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பற்கள், எலும்புகள் உறுதியாகும். (239)
52. மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நினைவு ஆற்றல் அதிகரிக்கும்.
(262)
53. மாதுளம் பழச் சாறினைத் தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
(536) (748)
54. மாதுளம் பழச் சாறு தினந்தோறும் ஒரு தம்ளர் அருந்தி இரைப்பைப் புண் குணமாகும். (648)
55. மாதுளம் பழச் சாறினை படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் அழியும்.
(694) (1144)
56. மாதுளம் பழச் சாறு சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
(1120)
57. மாதுளம் பழச் சாற்றில் பால் கலந்து சாப்பிட்டால் இரும்புச்சத்து கிடைக்கும்.
(1219) (1239)
58. மாதுளம் பழச் சாறை புழு வெட்டு உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், அந்த இடங்களில் முடி முளைக்கும்
(1555)
59. மாதுளம் பழச் சாறுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் தலை சுற்றல் குணமாகும்.
(1725)
60. மாதுளம்பூப் பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
(187)
61. மாதுளம்பூவை இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலத்துடன் இரத்தம் வருவது நிற்கும்.
(346) (657)
62. மாதுளம் பூவைக் கசாயம் செய்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
(651) (1142) (1777)
63. மாதுளம்பூ, ஓமம், மாம்பருப்பு சேர்த்துப் பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கழிச்சல் குணமாகும்.
(698)
64. மாதுளம்பூ, அறுகம்புல், மிளகு, சீரகம், அதிமதுரம், சிற்றரத்தை சேர்த்துக் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால், வெட்டை நோய் குணமாகும்.
(943)
65. மாதுளம்பூச் சாறு, 15 மி.லி எடுத்து கற்கண்டு சேர்த்து 3 வேளை சாப்பிட்டால் அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு நீங்கும்.. (1537)
66. மாதுளம்பூவை உலர்த்தி, மாதுளம் பட்டையுடன் சேர்த்து கசாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் தீரும்.
(1539)
67. மாதுளை இலை, மாந்தளிர் சேர்த்து அரைத்து ஒரு கிராம் எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால் இரத்தபேதி, வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
(1508)
68. மாதுளை வேரை எடுத்து சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி கசாயம் செய்து பருகினால், வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
(691)
69. மாதுளை வேர்ப் பட்டை, மாதுளை மரப்பட்டை, மாதுளை விதை ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடி செய்து காலை மாலை தலா 3 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
(603) இப்பொடியை மேற்கண்டபடி வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் பிள்ளைப் பேறு உண்டாகும். (1579)
70. மாதுளம் பழத் தோல், புளியங் கொட்டைத் தோல் சம அளவு எடுத்து இடித்து தூள் செய்து பசும் பாலில் சாப்பிட்டு வந்தால், சீதபேதி குணமாகும்.
(094)
71. மாதுளம் பழத் தோலை நீரில் ஊற வைத்து அந்த நீரை மலம் கழித்த பின் ஆசன வாயைக் கழுவப் பயன்படுத்தி வந்தால் மூலப் புண் குணமாகும்.
(376)
72. மாதுளம் பழத்தின் தோலை நெருப்பில் சுட்டுக் கரியாக்கி, அந்தத் தூளைக் கோதுமைக் கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும்.
(692)
73. மாதுளம் பழத் தோல் பொடி, சுக்குப் பொடி, மிளகுப் பொடி, சீரகப் பொடி ஆகியவற்றை நெய்யில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
(1580)
74. மாதுளம் பழத் தோலை வறுத்துக் கருக்கிப் பொடியாக்கி, அதை விளக்கெண்னெயில் கலந்து ஆசன வாயில் தடவி வந்தால் ஆசன வாய் எரிச்சல் குணமாகும். (1673)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை,
[தி.பி:2052,விடை(வைகாசி
)15]
{29-05-2021}
==================================================
மாதுளை |
மாதுளை |
மாதுளை |
மாதுளை |
மாதுளை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக