இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

மாமரம்

                மூலிகைப் பெயர்..........................................மாமரம்

                       மாற்றுப் பெயர்..............................................................

                       தாவரவியல் பெயர்............................Mangifera indica

                       ஆங்கிலப் பெயர்...................................MANGO TREE

        ==================================================


 

01.  மாவிலையை (பச்சைஇலைகள்) நெருப்பில் போட்டால் இலைகள் கருகி, மெல்லப் புகை வரும். அந்தப் புகையை வாயைத் திறந்து வாய்க்குள் பிடித்தால்  தொண்டைக் கட்டு, தொண்டைக் கமறல் ஆகியவை தீரும்.  (082) (1136)

 

02.   மாவிலை, நெல்லி இலைகளை நீரில் இட்டுக் காய்ச்சி, அந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால், வாய்ப் புண்கள் தீரும். (083)

 

03.   மாவிலையை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரைப் பருகி வந்தால், குரல் கம்மல் தீரும்.  (086)

 

04.   மாவிலையை உலர்த்தி, பொடி செய்து பற்பொடி போல் பாவித்து, அந்தப் பொடியைக் கொண்டு பல் துலக்கி வந்தால், பற்கள் உறுதி பெறும்.  (234) (1140)

 

05.   மாவிலையை (முற்றிய இலைநசுக்கிப் பொடி செய்து தணலில் இட்டு, அதிலிருந்து எழும் புகையை சுவாசித்தால் விக்கல் தீரும்.  (253) (1305)

 

06.   மாவிலைச் சூரணம், ஆலம்விழுதுச் சூரணம் இவைகளுடன் உப்பு சேர்த்து பற்பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பல் ஆட்டம் நிற்கும். பல் உறுதியாகும்.  (265)

 

07.   மாந்தளிரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து தேனுடன் கலந்து உட்கொண்டால் மேக நோய் குணமாகும்.  (584)

 

08.   மாந்தளிர், மாதுளை இலை அரைத்து ஒரு கிராம் எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால்  இரத்த பேதி, வயிற்றுக் கடுப்பு தீரும்.  (1508)

 

09.   மாம்பருப்பு, அசோகு பூ சம அளவு எடுத்து, பொடி செய்து 3 சிட்டிகை பாலில் கலந்து உட்கொண்டால், சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.  (091)

 

10.   மாம்பருப்புப் பொடி, நெய்யில் வறுத்தது  அரை  கிராம் எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால் இரத்தபேதி, ஆசன எரிவு தீரும். (1515)

 

11.   மாந்தளிர்பொடி ஒரு கிராம் எடுத்து கசாயம் செய்து குடித்தால் குரல் கம்மல் தீரும்.  (1514)

 

12.   உலர்ந்த மாம்பூவைப் பொடி செய்து சீரகப் பொடியும் அத்துடன் சேர்த்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்  உஷ்ண பேதி குணமாகும்.  (696)

 

13.   மாம்பருப்பு, மாதுளம்பூ, ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட்டு வந்தால் கழிச்சல் குணமாகும்  (698)

 

14.   மாம்பருப்பைப் பொடி செய்து பசும் பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பேதி குணமாகும்.  (1147)

 

 

15.   மாமரத்தின் வேர்ப் பட்டையை எடுத்து சிதைத்து கஷாயம் செய்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு, பெரும்பாடு ஆகியவை தீரும்.  (1516)

 

16.   மாமரத்துப் பிசினை எடுத்து பித்த வெடிப்பில் தடவி வந்தால் பித்த வெடிப்பு சரியாகும்.  (1977)

 

17.   மாம்பருப்பை எடுத்து பசும்பால் விட்டு அரைத்து,  பசும் பாலுடன் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பீச்சி அடிக்கும் பேதி உடனே நிற்கும்.  (104) (661)

 

18.   மாம்பருப்பைப் பொடி செய்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து இரண்டு வேளை கொடுத்தால், குடல் பூச்சி அகலும்.  (655)

 

19.   மாம்பழத்தைச் சாறு பிழிந்து, சிறிது சூடு படுத்திச் சாப்பிட்டால் நீண்ட வறட்சியான தாகம், பித்தம் ஆகியவை குணமாகும்.  (279)

 

20.   மாம்பழம், பப்பாளிப் பழம் இரண்டையும் தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தால், மூல நோய் குணமாகும்.  (363)

 

21.   மாம்பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் இருக்காது.  (367)

 

22.   மாம்பழம்சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.  (1213)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021} 

==================================================


மாம்பழம்

மாமரம்

மாம்பூ

மாமரம்

மாங்காய்

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக