மூலிகைப் பெயர்.......................................பற்பாடகம்
மாற்றுப் பெயர்...................................................................
தாவரவியல் பெயர்..........................................................
ஆங்கிலப் பெயர்...........................MOLLIGO
CERVIANA
==================================================
01. பற்பாடகம் இலைகளைப் பறித்து வந்து பால் வீட்டு அரைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் கண்களில் ஒளி பெருகும். (1445) உடல் நாற்றம்
நீங்கும். (1468)
02. பற்பாடகம், தூதுவேளை, கண்டங்கத்தரி, விஷ்ணுகிராந்தி சம அளவு எடுத்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து (சுண்டக்
காய்ச்சி) ஒரு மணிக்கு ஒருமுறை கொடுத்து வந்தால் டைபாய்டு காய்ச்சல் தீரும். (197)
03. பற்பாடகம், தூதுவேளை, கண்டங்கத்தரி, விஷ்ணு கிராந்தி சம அளவு எடுத்து கசாயம் வைத்து வேளைக்கு 10 மி.லி வீதம் மூன்று வேளைகள் குடித்து வந்தால் சன்னி சுரம், டைபாய்டு சுரம் ஆகியவை தீரும். (1434)
04. பற்பாடகம், கண்டங்கத்தரி, ஆடாதொடை, சுக்கு, விஷ்ணுகிராந்தி ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் நச்சுக் காய்ச்சல் குணமாகும். (1469) (1686)
05. பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் ஆகியவற்றைச் சேர்த்துக் கசாயம் செய்து குடித்து வந்தாலும் நச்சுக் காய்ச்சல் குணமாகும். (1470) (1687)
06. பற்பாடகம், கண்டங்கத்தரி வேர், தூதுவேளை, விஷ்ணுகிராந்தி சமூலம்
ஆகியவற்ரறைச் சேர்த்து கசாயம் வைத்து வேளைக்கு 25 மி.லி வீதம் குடித்து
வந்தால் விடாத காய்ச்சலும் தீரும்.(1549)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)11]
{25-05-2021}
பற்பாடகம் |
பற்பாடகம் |
பற்பாடகம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக