மூலிகைப் பெயர்......................................................பாகல்
மாற்றுப் பெயர்.....................................................................
தாவரவியல் பெயர்..............................................................
ஆங்கிலப் பெயர்......................CARILLA,
BITTER GOURD
01.
பாகல் இலைச் சாறு வாரந்தோறும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை கட்டுப் பாட்டில் இருக்கும்.
(342)
02.
பாகற்கொடி இலையைச் சாறு பிழிந்து 30
மி.லி. உட்கொண்டால் வயிற்றுப் பூச்சிகள் அழியும்.
(725) (732) (1372)
03.
பாகல் இலைச் சாறு 50 மி.லி வாரம் ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் சர்க்கரை அளவு குறையும்.
(1373)
04.
பாகல் இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வந்தால் வெளி மூலம் குறையும்.
(1374)
05.
பாகல் இலைச் சாறு தடவி வந்தால் உள்ளங்கால் எரிச்சல் தீரும்.
(1414)
06.
பாகற்காய் வற்றலை வறுத்து உட்கொண்டு வந்தால் மஞ்சள் காமாலை, கல்லீரல் குறைபாடுகள் நீங்கும்.
(1415)
07.
பாகற்காய் சாப்பிட்டு வந்தாலும், சிறுகுறிஞ்சான் இலைப் பொடி சாப்பிட்டு வந்தாலும், சர்க்கரை நோய் கட்டுப்படும்.
(335) (1922)
08.
பாகற்காய், நாவற்பழம், அவரைப் பிஞ்சு ஆகியவற்றை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டு வருதல் சர்க்கரை நோயாளிகளின் நலனுக்கு நல்லது.
(341)
09.
பாகற்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் விரைந்து குணமாகும்.
(1262)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)11]
25-05-2021}
பாகற்கொடி |
பாகற்காயும் கொடியும் |
பாகற்கொடி |
பாகற்காய் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக