மூலிகைப் பெயர்........................................தாமரை
மாற்றுப் பெயர்கள்...................... கமலம், முளரி,
.........................................................வனஜா, அம்புஜம்
..........................................................பத்மம், பங்கஜம்,
தாவரவியல் பெயர்............ NELUMBO NUCIFERA
ஆங்கிலப் பெயர்.............................................LOTUS
===================================================
01. தாமரை இதழ்கள் ஒரு கைப்பிடி எடுத்து இரு தம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை அல்லது தேன் சேர்த்து தினசரி ஒரு வேளை வீதம் அருந்தி வந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும். உட்சூடு தணியும். (004)
02. தாமரை இதழ்கள் சிலவற்றை எடுத்து சுத்தம் செய்து மென்று தின்று வந்தால் பேசும் திறன் கூடும். (343) (1771)
03. தாமரைப் பூவைச் சுத்தம் செய்து நீர் விட்டுக் கொதிக்க வைத்து கசாயம் செய்து தினசரி காலை மாலை இரு வேளைகளும் அருந்தி வந்தால் நரை முடி கறுப்பாகும். (908)
04. தாமரை வேர், இஞ்சி, துளசி இலை ஆகியவற்றை எடுத்து அரைத்துக் கொதிக்க வைத்து பற்றிட்டு வந்தால் விலா வலி குணமாகும். (1395)
05. தாமரைக் கிழங்கை நிழலில் உலர்த்திப் பொடி செய்து வெந்நீர் அல்லது இளநீரில் சாப்பிட்டு வந்தால் வயிற்று நோய்கள் தீரும். (1672)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி )17]
{22-05-2021}
===================================================
தாமரை |
தாமரை |
வண்ணத் தாமரைப்பூ |
தாமரைப்பூ |
தாமரை இலை |
தாமரைக்குளம் |
தாமரைக் கிழங்கு |
தாமரைக் கொட்டை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக