இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

கருங்காலி

 

            மூலிகைப் பெயர்.................................கருங்காலி

            மாற்றுப் பெயர்கள்..............................மாரோடம் 

            ...................................................செங்கருங்காளப்பூ

            தாவரவியல் பெயர்..........................Acacia Catechu

            ஆங்கிலப் பெயர்................................Black Catechu

            ........................................Cutch Tree, Heart Wood Tree

==================================================

01.   கருங்காலி  என்பது வலிமையான இலையுதிர் மரமாகும். மிக உயரமானது. மஞ்சள் நிறப் பூக்களையும், சாபல் நிறப் பட்டைகளையும் கொண்ட்து. பூக்கள் அதிக நறுமணம் கொண்டவை. பூக்கள் கம்பங் கதிர் போல நீளமாக ஒரே தண்டில் இணைந்திருக்கும். ஒரே தண்டில் எதிரடுக்குகளில் கூட்டிலைகள் கொண்டவையாக நெல்லி இலை போல இதன் இலைகள் அமைந்திருக்கும். (Asan)

 

02.   இம்மரத்தின் கட்டை, வேர் பட்டை, பிசின், ஆகியவை பயன் தரும் பாகங்களாகும். (Asan)

 

03.   கருங்காலி மரத்தின் பட்டையைத் தூள்செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்பந்தமான நோய்கள் சீரடையும். (Asan)

 

04.   கருங்காலிக் கட்டையைத் தண்ணீரில் ஊற வைத்துக் குளித்து வந்தால் உடல் சூடு தணியும். (Asan)

 

05.   கருங்காலி மரப் பிசினை எடுத்துக் காயவைத்துப் பொடித்து, பாலில் கலந்து அருந்தி வந்தால், உடல் அதிக பலம் பெறும்(Asan)

 

06.   கருங்காலிப் பட்டை, வேப்பம்பட்டை, நாவல்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து நாள்பட்ட புண்கள் மீது தடவி வந்தால், அவை விரைவில் ஆறிவிடும். (Asan)

 

07.   சுத்தம் செய்த கருங்காலி வேரை எடுத்துத் தண்ணீரில்  ஊறவைத்து, அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். (Asan)

 

08.   கைப்பிடி அளவு கருங்காலி இலை,களையும் ரோஜா இதழ்களையும்  எடுத்து ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து, முடிச்சுப் போட்டு, கண்கள் மூது வைத்து ஒற்றி வாருங்கள்  கண் சிவப்பு, கண் எரிச்சல், கண் நோய் விலகும். (Asan)

 

09.   ஒரு பங்கு கருங்காலி மரக் கட்டை, எட்டு பங்கு நீர், சிறிதளவு கடுக்காய், நெல்லிகாய், தான்றிக் காய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டிக் குடியுங்கள். ஆஸ்துமா, இருமல் அகலும். (Asan)

 

10.   கருங்காலிப் பட்டை, அமுக்கரா, ஓமம், சுக்கு, முடக்கத்தான், பூனைக் காலி விதை, வாதநாராயணன் வேர் தலா 100 கிராம்  எடுத்து, பொடித்து , காலை மாலை 2 கிராம் வீதம் சாப்பிடலாம். நாள்பட்ட மூட்டு வலி, வீக்கம், தேய்மானம் விலகும். (Asan)

 

11.   கருங்காலிப் பட்டை, ஆவாரம் பூ, தாமரைப்பூ, மருதம் பட்டை, ரோஜாப்பூ ஆகியவை வகைக்கு 100 கிராம் எடுத்து ஏலக்காய், சுக்கு, திப்பிலி தலா 25 கிராம் சேர்த்து இலேசாக வறுத்து, பொடித்து ஒன்றாகக் கலந்து காலை மாலை இரு வேளைகள்  அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால், இதய நோய் சீராகும். (Asan)

 

12.   கருங்காலிப் பட்டை 100 கிராம், சதகுப்பை, ஏலக்காய் தலா 20 கிராம் எடுத்து, இலேசாக வறுத்துப் பொடிக்கவும். இரண்டு தம்ளர் நீரில் 5 கிராம் அளவு தூளைப் போட்டு, சுண்டக் காய்ச்சி அருந்தினால், இரத்த அழுத்தம் குறையும். (Asan)

 

13.   கருங்காலிப் பட்டை, மருதம் பட்டை, ஆலம்பட்டை, அரசம் பட்டை, ஆவாரம் பட்டை ஆகியவை தலா 50 கிராம், வெந்தயம், நாவல் கொட்டை, வில்வ ஓடு, மாதுளைத் தோல், மாம் பருப்பு, தலா 20 கிராம்  எடுத்து பொடித்து 5 கிராம் வீதம் காலை மாலை நீரில் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும். (Asan)

 

14.   கருங்காலிப் பட்டை, சரணை வேர், சிறு நெருஞ்சில், சிறு பீளை, சீரகம், சோம்பு, நீர்முள்ளி விதை, பேராமுட்டி, மாவிலங்கப் பட்டை  தலா 100 கிராம் என எல்லவற்றையும் ஒன்றாகக் கலந்து பொடிக்கவும். இதில் 5 கிராம் எடுத்து, இரண்டு தம்ளர் நீர் சேர்த்து, கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டக் காய்ச்சி, காலை மாலையில் தொடர்ந்து 21 நாட்கள் பருகி வந்தால், சிறு நீரகக் கற்கள் கரையும். (Asan)

 

15.   (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்க ஆசான், 23-04-2017 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை)

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

==================================================

கருங்காலி மரம்

கருங்காலி மணிமாலை

கருங்காலிப் பூங்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக