மூலிகைப் பெயர்.......................................காக்கிரட்டை
மாற்றுப்பெயர்கள்..................சங்குப் பூ, காக்கணம்
..........................காக்கட்டான், மாமூலி, காக்கிறட்டை
...................................... கடுந்தாக்கணம், காக்கணத்தி
..........................................................................காக்கரட்டை
தாவரவியல் பெயர்.....................CLITORIA
TERNATEA
சுவை...................................கைப்பு, துவர்ப்பு, இனிப்பு
தன்மை..................................................................வெப்பம்
===================================================
1) கூட்டிலைகளையும் பளிச்சிடும் நீல நிற மலர்களையும் உடைய அழகிய ஏறு கொடி. தட்டையான காய்களையுடையது, இது கறுப்புக் காக்கரட்டான் எனப்படும். .
2) வெள்ளை நிறப் பூ உள்ள இனமும் உண்டு. இது வெள்ளைக் காக்கரட்டான் எனப்படும்.
வெள்ளைப் பூக் காக்கரட்டானே மருத்துவக் குணத்தில் சிறந்தது ஆகும்.
3) இதனுடைய இலை, விதை, வேர் ஆகியவையே மருந்தாகப் பயன்படுகிறது.
4) கருங்காக்கரட்டான் வேர் மந்தம், குடற்புழு ,வளிப்பெருக்கு, கபம் ஆகியவற்றை நீக்கும். வேரைப் பாலில் வேகவைத்தால் தூய்மையாகும்.
5) காக்கிரட்டை இலைசாறும் இஞ்சிச்சாறும் சம அளவாக எடுத்துக் கலந்து ஓரிரண்டு தேக்கரண்டி வீதம் கொடுத்து வந்தால் இளைப்பு நோயில் உண்டாகும் வியர்வை நீங்கும்.
6) காக்கிரட்டை இலையை
உப்புச் சேர்த்து அரைத்து நெறிக்கட்டிகளுக்குப் பூச வீக்கம் கரையும்.
7) காக்கிரட்டை விதையை இள வறுப்பாய் வறுத்துப் பொடித்து ஒரு கிராம் முதல் கால் தேக்கரண்டி கொடுக்க நன்றாகப் பேதியாகும்.
8) காக்கரட்டான் விதை 10 பங்கு, இந்துப்பு 10 பங்கு சுக்குத்தூள் 2 பங்கு எடுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி கொடுத்துவர யானைக்கால் நோய்
குணமாகும்.
9) காக்கரட்டான் பச்சை வேர் 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டு 200 மி.லி ஆகக் காய்ச்சி ஒரு முடக்கு வீத்ம் 2 மணிக்கு ஒரு தடவை வீதம் 6 முறைச் சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரும்.
10) காக்கிரட்டை வேரைப் பாலில் அவித்து, பால்விட்டு அரைத்து சுண்டைக் காயளவு காலை மாலை பாலில் கலந்து சாப்பிட மேக வெள்ளை,
பிரமேகம், தந்திமேகம், சிறுநீர்ப் பாதை அழற்சி, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.
11) நெய்யில் வறுத்து இடித்த காக்கிரட்டை விதைச் சூரணம் 5 முதல் 10 அரிசி எடை வெந்நீருடன் கொடுக்கக் குழந்தைகளுக்க்கான இழுப்பு, மூர்ச்சை,
நரம்பு இழுப்பு ஆகியவை தீரும்.
12) காக்கிரட்டை இலைச் சாறினை தாய்ப் பாலில் கலந்து புகட்டினால் குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு நீங்கும்.(171)
13) காக்கிரட்டை இலைச் சாறு, இஞ்சிச்சாறு சம அளவு கலந்து, அத்துடன் சம அளவுக்கு தேனும் கலந்து ஒரு தேக்கரண்டி அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்து வந்தால் உடல் வெப்பம் தணிந்து மழைக் காலங்களிலும் வரும் மிகு வியர்வை குணமாகும்.(948) (960)
14) காக்கிரட்டை இலையை வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா கட்டுக்குள் இருக்கும்.(1067)
15) காக்கிரட்டை வேர், நொச்சி இலை, மூக்கிரட்டை வேர் ஆகியவற்றை எடுத்து சிதைத்து சுக்கு மிளகு சேர்த்து கசாயம் வைத்து தினசரி 30 மி.லி வீதம் கொடுத்து வந்தால், இளம்பிள்ளை வாதம்
குணமாகும்.(1439)
16) காக்கிரட்டை விதைத் தூள் 50 கிராம், இந்துப்பு 50 கிராம், சுக்குத் தூள் 25 கிராம், கலந்து வேளைக்கு 3 கிராம் வீதம் தினம் ஒரு
வேளை சாப்பிட்டு வந்தால் யானைக்கால் நோய்
குணமாகும்.(1048)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
==================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)02]
{16-05-2021}
==================================================
நீலக் காக்கிரட்டை |
வெள்ளைக் காக்கிரட்டை |
நான்கு வண்ணக் காக்கிரட்டை |
காக்கிரட்டைக் காயும் நெற்றும் |
நீலக் காக்கிரட்டை |
வெள்ளைக் காக்கிரட்டை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக