மூலிகைப் பெயர்.......................... அன்னாசி
மாற்றுப் பெயர்கள்.........................................
தாவரவியல் பெயர்.............
ஆங்கிலப் பெயர்........................PINE APPLE
====================================================
01. அன்னாசிப் பழம், கருஞ்சீரகம், வெல்லம் ஆகியவை சேர்ந்த கலவை கருத்தடை மருந்தாக செயல்படும். (598)
02. அன்னாசிப் பழத் துண்டுகள் சிலவற்றை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் வெள்ளை படுதல் குணமாகும். (604)
03. அன்னாசிப் பழம் தினசரி சில துண்டுகளாவது சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழியும்.(706)
04. அன்னாசிப் பழம் சிறிதளவாவது தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குணமாகும்.(1132)
05. அன்னாசிப் பழச் சாற்றினை அருந்தினால் சிறுநீர் எரிச்சல் தீரும்.(1198)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
===============================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)25]
{30-04-2021}
===============================================
அன்னாசி. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக