இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 1 ஜூன், 2021

வசம்பு

             மூலிகைப் பெயர்..............................................வசம்பு

             மாற்றுப் பெயர்கள்.............உக்கிரம், உரைப்பான்

             ........................................................வசம்,வேணி, வசை

             ...................................................பேர் சொல்லா மருந்து

             ...........................................கடுவான், பிள்ளை மருந்து

             தாவரவியல் பெயர்.......................ACORUS CALAMUS

             ஆங்கிலப் பெயர்.....................SWEET FLAG, ACORUS

 

 ==================================================

 

01.   வசம்பு செடி வகையைச் சார்ந்த ஒரு தாவரம். நீண்ட அதிகமான, கிளைகளுடன் படர்ந்து வளரும். செடியின் தண்டு பெருவிரல் அளவு தடிமன் உள்ளவை. (Asan)

 

02.   வசம்புப் பூக்கள் சிறியவை. நீளம் 5 முதல் 10 செ.மீ வரை இருக்கும். பழங்கள் மஞ்சள் நிறமானவை.  (Asan)

 

03.   உலர்ந்த வேர்த் தண்டுகளில்கலாமஸ்என்னும் நறுமணமுள்ள மருந்துப் பொருள்  நிறைந்து காணப்படுகிறது. (Asan)

 

04.   வசம்பு காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. இலை, தண்டு, வேர்கள் சித்த மருத்துவத்திலும் ஆயுர் வேத மருத்துவத்திலும் பயன்படுபவை. (Asan)

 

05.   வசம்பில்அசரோன்”, “அகோரின்”, மற்றும்கொலாமினால்போன்ற வேதிப் பொருள்கள் அடங்கி உள்ளன. (Asan)

 

06.   வசம்பைச் சுட்ட பின்பு தான் பயன் படுத்த வேண்டும் என்கிறது சித்த மருத்துவம். (Asan)

 

07.   சுட்ட வசம்புச் சாம்பலை தேனில் குழைத்து நாக்கில் தடவினால் வாந்தி உணர்வு கட்டுப் படும். (Asan)

 

08.   வசம்புப் பொடி, துளசி, திப்பிலி, சர்க்கரை கலந்து இடித்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். (Asan)

 

09.   வசம்பைப் பொடியாக்கி, அரைத் தேக்கரண்டி தூளுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் 40 நாட்களில் நரம்புத் தளர்ச்சிக்குப் பலன் கிடைக்கும். (Asan)

 

10.   வசம்புத் தூளை அரைத்து வெட்டுக் காயத்தின் மீது தூவி கட்டுக் கட்டினால், விரைவில் காயம் ஆறும்.  (Asan)

 

11.   வசம்பைச்  சூடு படுத்திப் பொடித்து பாலில் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்குப் பசியின்மை வராமல் தடுக்கலாம். (Asan)

 

12.   வசம்பைச் சுட்டுத் தூளாக்கி சுக்குப் பொடியுடன் கலந்து வயிற்றின் மேல் பூசினால் உப்புசம் மாறும். (Asan)

 

13.   வசம்பைத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் மூன்று முறை உரைத்து, குழந்தைகளின் நாக்கில் தடவினால், பேச்சுத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீர் ஒழுகுதல் ஆகியன தீரும். (Asan)

 

14.   வசம்புத் தூளைத் தேனில் குழைத்து விடியற்காலை தோறும் உட்கொண்டு வந்தால், நாக்குப் பிறழ்ச்சி நீங்கும். (Asan)

 

15.   வசம்புப் பொடியை அருகம்புல் சாற்றில் கலந்து கொடுத்தால், திக்கிப் பேசுதல் சரியாகும். (Asan)

 

16.   சிறிதளவு வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைகளுக்குத் தந்தால், காய்ச்சல் குணமாகும். (Asan)

 

17.   வசம்பு, கொத்துமல்லி விதை, லோத்திரப் பட்டை ஆகியவற்றை அரைத்துப் பூசினால் முகப் பருக்கள், தேவையில்லாத முடிகள் நீங்கி முகம் அழகு பெறும். (Asan)

 

18.   வல்லாரைக் கீரை 150 கிராம்,வசம்பு 15கிராமெடுத்து அரைத்து, தேனில் கலந்து உண்டால், ஞாபக சக்தி பெருகும். (Asan)

 

19.   கடுகையும் வசம்பையும் சிறிதளவு எடுத்து இடித்துப் பொடி செய்து, பசுவின் சிறு நீரில் குழைத்துத் தடவி வந்தால் வீக்கம் குறையும். (Asan)

 

20.   வசம்புத் துண்டை வாயிலிட்டுச் சுவைத்தால், தொண்டைக் கமறலை அகற்றும்.  (Asan)

 

21.   திருநீற்றுப் பச்சிலைச் சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்து, சருமத்தில் தோன்றும் பருக்களுக்குப் போட்டால் விரைவில் மாறும். (Asan)

 

22.   வாயுவினால் அடிவயிற்றில் ஏற்படும் வலியைப் போக்க வசம்பின் சாம்பலை, ஆமணக்கு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூசலாம். (Asan)

 

23.   முருங்கை இலையுடன், வசம்பு, உப்பு சேர்த்துச் சுட்டுக் கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றித் தடவினால் குழந்தைகளின் சாதாரண வயிற்றுவலி தீரும். (Asan)

 

24.   வசம்பை நல்ல விளக்கில் சுட்டு, தாய்ப்பாலில் மூன்று முறை உரைத்து தொப்புளைச் சுற்றித் தடவுங்கள். குழந்தையின் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு குணமாகும். (Asan)

 

25.   விஷம் அருந்தியவர்களுக்கு, வசம்பை அரைத்து உடனேயே இரண்டு மூன்று தேக்கரண்டி கொடுத்தால் நஞ்சு வெளியே வந்து விடும். (Asan)

 

26.   கைப்பிடி அளவு மருதாணி இலை, ஒரு மஞ்சள் துண்டு, சிறிது வசம்பு, கற்பூரம் ஆகியவற்றை ஒன்றாக அம்மியில் வைத்து அரைத்து கால் ஆணி மீது வைத்து இலையால் மூடிக் கட்டினால் ஆணி மறைந்து போகும். (Asan)

 

27.   வேப்பங்கொழுந்து, வசம்பு, மிளகு, பூண்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து, மகப் பேறு இல்லாத பெண்கள் மாதவிலக்கு ஆன நாட்களில் சாப்பிடவும். மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் மலடு நீங்கி கர்ப்பம் தரிக்கும். (Asan)

 

28.   வசம்பின் வேர் இருமல், வாய் துர்நாற்றம் போறவற்றுக்கு அருமருந்தாக இருக்கிறது. (Asan)

 

29.   வசம்பின் அடி நில மட்டத் தண்டு, இலை, பூ ஆகியவை பித்தப் பைசிறுநீர்ப் பை கற்களைக் கரைக்க மருந்தாகப் பயன்படுகிறது. (Asan)

 

30.   நாட்பட்ட கீல்வாத நோய்களுக்கு, வசம்பைக் காசுக் கட்டியுடன் சேர்த்து நீர் விட்டு அரைத்து பற்றுப் போடலாம். (Asan)

 

31.   செரியாமையைப் போக்கி, வயிற்றில் சேர்ந்த வாயுவைப் போக்க வேண்டுமா ? வசம்பு ஒரு பங்கும், வெந்நீர் பத்து பங்கும் சேர்த்து ஊற வைத்து வடிகட்டி 15 முதல் 30 மி.லி அளவுக்கு அருந்தி வந்தால் குணமாகும். குழந்தைகளுக்கு உண்டான கழிச்சலுக்கும், காய்ச்சலுக்கும் கூட இதனைக் கொடுக்கலாம். (Asan)

 

32.   குழந்தைகளுக்கு இரவில் வரும் சளிக்கு, வசம்புடன் அதிமதுரக் கட்டையைச் சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்கலாம். ஓரிரு நாட்களில் குணமாகும். (Asan)

 

33.   பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்குத் தொண்டையில் படியும் அக்கரம் நீங்க, தினந்தோறும் உள்நாக்கில் தேனில் குழைத்த வசம்புப்பொடி தடவவும். (Asan)

 

34.   சுடுதண்ணீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பைக் கலந்து கிருமி நாசினியாக உபயோகிக்கலாம். (Asan)

 

35.   வசம்பை அதிக அளவில், நீண்ட காலத்திற்கு உட்கொண்டால், கடுமையான வாந்தியும், வயிற்றுக் குமட்டலும் உண்டாகும். எனவே அளவோடு சேர்க்க வேண்டும். (Asan)

 

36.   (ஆதாரம்: நாகர்கோயில், எஸ். மகாலிங்க ஆசான், 10-04-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

37.   வசம்பைச் சுட்டால் புகை வரும். இந்தப் புகையை ஊதுகுழல் மூலம் காதுக்குள்  ஊதினால் காது இரைச்சல் குணமாகும்.  (067)

 

38.   வசம்பு, ஓமம், வெள்ளைப் பூண்டு ஆகியவை சம அளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் ஜன்னி குணமாகும்.   (167)

 

39.   வசம்புத் தூளை தேங்காய் எண்ணெயில் போட்டு சிவக்கக் காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து சிரங்குகளின் மீது தடவி வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.   (173)

 

40.   வசம்பைச் சுட்டுக் கரியாக்கி  பொடித்து சிறிது எடுத்து தேனில் குழைத்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றில் உள்ள நாக்குப்  பூச்சிகள் வெளியேறும்..  (345) (647) (705)

 

41.   வசம்புத் தூளை வெட்டுக் காயத்தின் மீது தூவி வந்தால் காயம் விரைவில் ஆறும்.  (529) (1164) (1938)

 

42.   வசம்பைச் சுட்டுக் கரியாக்கிப் பொடித்து 100 மில்லி கிராம் எடுத்து தாய்ப்பாலில் கலக்கி குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுத்தால்  அவர்களது வயிற்று வலி தீரும். (562) (673)

 

43.   வசம்புடன் நாய்த்துளசி இலைகளைச் சேர்த்து அரைத்து உடம்பு முழுதும் பூசி சற்று நேரம் கழித்துக் குளித்தால் சீலைப் பேன் ஒழியும்.  (921)

 

44.   வசம்புடன் பலகை மஞ்சள் சேர்த்து அரைத்து கன்னத்திலும் கழுத்திலும் போட்டு வந்தால் பொன்னுக்கு வீங்கி குணமாகும்.  (1006)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )18]

{01-06-2021} 

================================================== 


வசம்பு

வசம்பு

வசம்பு

வசம்பு




           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக