மூலிகைப்பெயர்.................................................முள்ளங்கி
மாற்றுப் பெயர்........................................................................
தாவரவியல் பெயர்.....................................
ஆங்கிலப் பெயர்.......................................................RADISH
=================================================
01. முள்ளங்கி இலைச் சாறு 5 மி.லி வீதம் 3 வேளைகள் சாப்பிட்டால் மலக் கட்டு நீங்கும். (1610) சிறுநீர்க் கட்டு நீங்கும். (1637)
02. முள்ளங்கி விதைகளைப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருகும். (1638)
03. முள்ளங்கி விதையைப் பொடி செய்து கற்கண்டு சேர்த்து தினசரி 2 வேளை வீதம் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.(494)
04. முள்ளங்கிச் சாறு சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம், தலைவலி, இருமல் குணமாகும். (111)
05. முள்ளங்கியைச் சமைத்து உண்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். (728)
06. முள்ளங்கிச் சாறு, வாழைத் தண்டுச் சாறு சேர்த்து 50 மி.லி குடித்து வந்தால் கல்லடைப்பு நீங்கும். (1052) (1197)
07. முள்ளங்கிச் சாறு 30 மி.லி வீதம் காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீர்த் தாரை நோய்கள் நீங்கும். (1584) (1609)
08. முள்ளங்கியைச் சமைத்து உண்டு வந்தால் அதிமூத்திரம் குணமாகும். (1639)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்
மூலிகை,
[தி.பி:2052,விடை(வைகாசி )18]
{01-06-2021}
==========================================================
வெள்ளை முள்ளங்கி |
முள்ளங்கிக் கீரை |
முள்ளங்கி விதை |
சிவப்பு முள்ளங்கி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக