மூலிகைப் பெயர்................................................சதகுப்பை
மாற்றுப் பெயர்கள்.......................சோயிக் கீரை விதை,
.............................................................மதுரிகை,சடைகுப்பி,
....................................................................................சதபுஷ்பா
தாவரவியல் பெயர்...................ANETHUM GRAVEOLENS
ஆங்கிலப் பெயர்....................................................
THE DILL
01. நான்கடி உயரம் வரை வளரக் கூடிய இச் செடியில் இலைகள் இறகு போன்றவை. ஒவ்வொரு காம்பிலும் கண்ணைக் கவரும் நூற்றுக் கணக்கான மஞ்சள் நிற மலர்களும், மலர்களில் விதைகளும் காணப்படும்.(Asan)
02. சதகுப்பைச் செடியின் இலை, பூ, விதை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. இனிப்பு மற்றும் கார்ப்புச் சுவை உடையவை.(Asan)
03. சதகுப்பை இலைகளைச் சாப்பிட்டு வந்தால் வாத நோய், பசியின்மை குறையும்.(Asan)
04. சதகுப்பை இலைகளை சிறிது விளக்கெண்ணெய் தடவி வதக்கி, கட்டிகள் மேல் கட்டி வந்தால், கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.(Asan)
05. சதகுப்பை இலைகளை நன்றாக அரைத்து 10 கிராம் எடுத்து, 150 மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி மூன்று வேளையாகக் குடித்து வந்தால் பசிமந்தம், மூக்கில் நீர் கொட்டுவது சரியாகும்.(Asan)
06. சதகுப்பை இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து இடித்து, அரை லிட்டர் நீரில் போட்டு, 200 மி.லி யாக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, பிள்ளை பெற்ற பெண்ணுக்குக் கொடுத்து வந்தால், கருப்பை அழுக்குகள் வெளியேறும். உதிரச் சிக்கல் தீரும்.(Asan)
07. சதகுப்பை இலைகளை சிறிதளவு எடுத்து காய வைத்துப் பொடித்து, நோயாளியின் படுக்கை அறையில் வைத்துப் புகைபோட்டால், காது வலி, மூக்கில் நீர் வடிதல், தலை நோய் கட்டுப்படும்.(Asan)
08. சதகுப்பை, ஆளி விதை, ஆமணக்கு விதை ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து மூட்டு வீக்கங்களுக்குப் பற்றுப் போடலாம்.(Asan)
09. சதகுப்பை விதைகளை 30 கிராம் எடுத்து, பொடித்து, அரை லிட்டர் நீரில் ஊறவைத்து அருந்தினால், மாந்தம் தணியும்.(Asan)
10. சதகுப்பை இலைச் சாறு 20 மி.லி எடுத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்று வலி குறையும்.(Asan)
11. சதகுப்பை விதைகளை நசுக்கி கொதிக்கும் நீரில் போட்டு 4 மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டிக் குடித்து வந்தால், வயிற்று வலி கட்டுப்படும்.(Asan)
12. சதகுப்பை சூரணத்தை ஒரு கிராம் எடுத்து சிறிதளவு நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால், பசியின்மை கட்டுப்படும்.(Asan)
13. சதகுப்பை, இஞ்சி, கிராம்பு, சீரகம், திப்பிலி, மிளகு ஆகியவற்றை நன்றாக உலர்த்தி, இடித்து சிறிதளவு துளசிச் சாறு கலந்து உட்கொண்டால் பசியின்மை குறையும்.(Asan)
14. சதகுப்பையை ஐந்து கிராம் எடுத்து 100 மி.லி நீரிலிட்டு, 25 மி.லி யாக வரும் வரைக் காய்ச்சி, தினமும் இரு வேளை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் செரியாமை, வயிறு உப்புசம் தீரும்.(Asan)
15. சதகுப்பை விதைப் பொடி 3 கிராம், கோரைக்கிழங்குப்பொடி, காய்ந்த நிலவேம்பு சமூலம் தலா 15 கிராம், வசம்புப் பொடி 4 கிராம், எடுத்து, ஒன்றாகச் சேர்த்து, ஒரு தம்ளர் நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி, தினமும் மூன்று வேளை அருந்தினால் உடல் வலிமை பெறும்.(Asan)
16. சதகுப்பை, ரோஜா மொட்டு ஆகியவை சம அளவு எடுத்து இடித்து , ஒரு பாத்திரத்தில் இட்டு 200 மி.லி வெந்நீர் ஊற்றி மூடி, ஊறவிடவும். மூன்று மணி நேரம் கழித்து வடிகட்டி, பெரியவர்கள் ஒரு அவுன்ஸ், குழந்தைகள் கால் அவுன்ஸ் அருந்தினால் வெப்பத்தால் உண்டாகும் வயிற்று வலி அகலும்.(Asan)
17. சதகுப்பை, தோல் நீக்கி இடித்த சுக்கு, மிளகு, ஆகியவை கொஞ்சம் எடுத்து, மிதமாக வறுத்து, இடித்து, சிறிதளவு ஏலக்காய் சேர்த்து நன்றாகப் பொடித்து, தென் கலந்து சப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும்.(Asan)
18. சதகுப்பை பூவை ஒரு பங்கு
எடுத்து இருபது பங்கு கொதிக்கும் நீரில் சேர்த்து, வடிகட்டி, 200 மி.லி குடித்து வர, பிரசவித்த பெண்களுக்கு குருதிச் சிக்கலை வெளியேற்றும்.(Asan)
19. சதகுப்பைப் பொடி, அமுக்கரா சூரணம் தலா அரைத் தேக்கரண்டி எடுத்து, சிறிதளவு வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டல் தாய்ப் பால் சுரப்பு மிகுதியாகும்.(Asan)
20. சதகுப்பை விதைப் பொடி
சிறிதளவு எடுத்து கொத்துமல்லி இலைச் சாற்றில் கலந்து குடித்தால் இரத்த சோகை குணமாகும். மாதவிடாய் நேரத்தில் பெண்கள் இதைக் குடித்து வந்தால் இரத்தம் விருத்தி அடையும்.(Asan)
21. சதகுப்பை, மரமஞ்சள், கருஞ்சீரகம், பனை வெல்லம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, பொடித்து, காலை மாலை என இரு வேளை 5 கிராம் சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்து சோம்பு நீர் குடித்து வந்தால் உதிரச் சிக்கல் நீங்கி, கருப்பையைப் பலப்படுத்தும்.(Asan)
22. சதகுப்பை, எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து இலேசாக வறுத்து, பொடித்து, மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு 10 நாட்கள் முன்னரே ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பனை வெல்லத்துடன் கலந்து உருண்டை செய்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வரலாம். மாதவிடாய் சுழற்சி சீராகும். வலியும் சோர்வும் குறைந்து கருப்பை பலப்படும்.(Asan)
23. (ஆதாராம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்க ஆசான்,
02-04-2017 நாளிட்ட தினமலர் நாளிதழில் எழுதிய கட்டுரை.)
24. சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் ஆகியவற்றை சமமாக எடுத்து அரைத்து வெல்லம் கலந்து 5 கிராம் அளவு தினசரி சாப்பிட்டு வந்தால் கருப் பை பலப் படும். உதிரச் சிக்கல் தீரும்.(219)
25. சதகுப்பை விதையை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் செரிமான ஆற்றல் பெருகும்.(693)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)06]
{20-05-2021}
சதகுப்பை |
சதகுப்பை |
சதகுப்பை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக