மூலிகைப் பெயர்....................................பூசனிக் காய்
மாற்றுப் பெயர்கள்.............................சாமபல் பூசனி,
.................................கல்யாணப் பூசனி. வெண்பூசனி
தாவரவியல் பெயர்.............................................................
ஆங்கிலப் பெயர்..........................................ASH GOURD
=================================================
01. பூசனிக்காயை தொடர்ந்து மூன்று மாதங்கள் உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் பருமன் ஆகும். எடை கூடும்.
(1054) (1497) (1974)
02. பூசனிக் காய்ச் சாறு, வாழைத் தண்டுச் சாறு, அறுகம்புல் சாறு இவற்றுள் எதையாவது ஒன்றை சாப்பிட்டு வந்தாலும் உடல் சதை போடுவதைத் தடுக்கலாம்.
(1056)
03. பூசனிக் காய், அவல், மிளகாய்த் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து வேக வைத்து சிறு சிறு உருண்டைகள் ஆக்கி காய வைத்து நல்லெண்ணையில் வறுத்துச் சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் சதை பிடிக்கும். உடல் பலம் பெறும்.
(1063)
04. பூசனிச் சாறு, செம்பருத்திப் பூச்சாறு, இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நீர்த் தாரை எரிச்சல், வயிற்றுப் புண், சீதபேதி ஆகியவை குணமாகும். (1498) சொட்டு மூத்திரம் குணமாகும்.
(1509)
05. பூசனிக் காயைத் துருவி பிட்டு அவியலாக அவித்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் எலும்பும் தோலுமாக இருக்கும் குழந்தைகளின் உடல் நல்ல வளர்ச்சி பெறும். சதை பிடிக்கும். எடை கூடும்.
(1510)
06. பூசனிச் சாறு (வெண்பூசனி) தினமும் 100 மி.லி அருந்தி வந்தால் புற்று நோய் கட்டுப்படும். (816)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
=================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)12]
{26-05-2021}
=================================================
பூசனி (வெண்பூசனி) |
பூசனி (வெண்பூசனி) |
பூசனி (வெண்பூசனி) |
பூசனி (வெண்பூசனி) |
பூசனி (வெண்பூசனி) |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக