இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 26 மே, 2021

பிரமியவழுக்கை

 

          மூலிகைப்பெயர்.......................பிரமிய வழுக்கை

        மாற்றுப் பெயர்கள்.........சாம்பிராணிப் பூண்டு,

        ...........................................................சப்தலை,வாடிகம்,

         ......................................................நீர்பிரம்மி, விவிதம்

        தாவரவியல் பெயர்........................................................

        ஆங்கிலப் பெயர்..............................Bacopa monnieri

 

===================================================

                           

01.     சதைப் பற்றான இலைகளுடன் பல கிளைகளாக அடர்த்தியாக வளர்ந்து இருக்கும்.  இலைகள் நீண்டு உருண்டவை. வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டவை. மலர்கள் விரைவில் வாடிவிடும் தன்மை கொண்டவை.

 

02.     சாம்பிராணிப் பூண்டு, பிரமிய வழுக்கை, நீர்ப் பிரம்மி, சப்தலை, வாடிகம், சருமம், விவிதம் ஆகிய பல பெயர்களால் இம்மூலிகை அழைக்கப்படுகிறது.

 

03.     இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்ட தாவரம் இது. குளிர்ச்சித் தன்மை கொண்டது. 

 

04.     நீர்ப்பிரம்மி முழுத் தாவரத்தையும் ஆமணக்கு எண்ணெயில் வதக்கி  வீக்கம், கட்டிகள் உள்ள இடத்தில் ஒற்றடம் கொடுத்து, பொறுக்கும் சூட்டில்வைத்துக் கட்டினால் வீக்கம், கட்டிகள் கரைந்து போகும்.

 

05.     முழுத் தாவரத்தையும் நீரில் கழுவி சுத்தம் செய்து அரைத்துச் சாறு பிழிய வேண்டும். இந்தச் சாறினை எடுத்து நான்கு தேக்கரண்டி அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் தொண்டை கரகரப்பு சரியாகும்.

 

06.     ஒரு பிடி தாவரத்தை வெண்ணெயில் பொரித்து தினமும் ஒரு வேளையாக 5 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தாலும் தொண்டை கரகரப்புச் சரியாகும்.

 

07.     முழுத்தாவரத்தையும் அரைத்துப் பசையாக்கி  நெஞ்சுப் பகுதியில் பூசினால் கோழைக் கட்டு குணமாகும்.

 

08.     பிரமிய வழுக்கை இலைச் சாற்றுடன் சம அளவு நெய் கலந்து காய்ச்சி வடித்து காலை மாலை ஒரு தேக்கரண்டி கொடுத்து வந்தால் சித்தப் பிரமை, காக்காய் வலிப்பு தீரும்.  (1075) (1604) (1656)

 

09.     பிரமிய வழுக்கைச் செடியை அரைத்து ஒரு கிராம் எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் புண்கள் ஆறும்.  (1603)

 

10.     பிரமிய வழுக்கை இலையை அரைத்து மார்பில் கட்டி வந்தால் சளி மிகுதியால் வரும் இருமல் தீரும்.  (1658)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )12]

{26-05-2021}

==================================================


பிரமியவழுக்கை

பிரமியவழுக்கை









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக