மூலிகைப்பெயர்.......................................சுண்ணாம்பு
மாற்றுப் பெயர்..............................................வெள்ளை
வேதியியல்பெயர்...............CALCIUM
BI-CARBONATE
ஆங்கிலப்பெயர்.........................................................LIME
===================================================
01. சுண்ணாம்பு சிறிது எடுத்து விளக்கெண்ணெயில் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து சூடு பண்ணி, பொறுக்கும் சூட்டில் தொண்டையில் தடவினால், தொண்டை வலி குணமாகும்.(076) (081)
02. சுண்ணாம்பின் தெளிந்த நீர் விட்டு அமுக்கிராங் கிழங்கை அரைத்து, அதே நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்றுப் போட்டால் கழுத்து வலி குணமாகும்.(078)
03. சுண்ணாம்பினை குப்பைமேனி சாறுடன் சேர்த்து அரைத்து வீக்கங்களின் மீது தடவினால், வீக்கம் குணமாகும்.(569)
04. சுண்ணாம்பு, மஞ்சள், அறுகம்புல் சாறு கலந்து நகச் சுற்றுக்குப் பற்றுப் போட்டால் நகச் சுற்று குணமாகும்.(572)
05. சுண்ணாம்பு, உப்பு, மஞ்சள் மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து, சற்று சூடு செய்து சுளுக்கின்மீது பற்று போட்டால் சுளுக்கு குணமாகும்.(583)
06. சுண்ணாம்பு, நவச்சாரம் இரண்டையும் சேர்த்து குழப்பி பாலுண்ணிகள் மீது தடவி வந்தால் அவை விரைவில் மறைந்துவிடும்
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)07]
{21-05-2021}
==================================================
சுண்ணாம்பு |
சுண்ணாம்பு |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக