இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 17 மே, 2021

கார்போகரிசி

 

               மூலிகையின் பெயர்..............................கார்போகரிசி
               மாற்றுப் பெயர்:............................... .....கார்புவ ஆரிசி
                .....................................................கப்புவா அரிசி, பாகுசி
               ...................................................................சம்பங்கி விதை

               தாவரவியல் பெயர் ......... PSORALEA CORRYLIFOLIA.
               தாவரக்குடும்பம் -............................... LEGUMINACEAE
               ஆங்கிலப் பெயர்.....................................BABCHI SEEDS

 

==================================================

 

 

01.   கார்போகரிசி ஒரு செடி வகையைச் சேர்ந்தது. இது சுமார்  3 அடி உயரம் வரை வளரும்.

 

02.   இலைகள் அகலமாக இருக்கும், கொத்தாக இருக்கும். ஒரு கிளையில் 8-12 பூக்கள் பூக்கும். அவை காயாகி விதைகள் உண்டாகும்.

 

03.   காய்கள் சுமார் 7-8 மாதங்களில் முதிர்ந்து விடும். இதன்விதையிலிருந்து  எண்ணெய் எடுப்பார்கள் ( ரோகன் பாப்சி).

 

04.   இதன் இலை, பழம், விதை, வேர் யாவும் மருத்துவப் பயன் உடையவை.

 

05.   .பயன் தரும் பாகங்கள் -: இலை, பழம், விதை, மற்றும் வேர் முதலியன.

 

06.   இதில் உள்ள முக்கிய வேதிப் பொருட்கள் -: சொரோலின் மற்றும் ஐசோசொரோலின்.(PSORALEN)

 

07.   மருத்துவப் பயன்கள்- ஆதிகாலத்தில் சைனாவிலும், இந்தியாவிலும் இதன் எண்ணெயை உடல் வெளி பாகத்தில் தேய்த்து தோல் வியாதிகளைப் போககினர் மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியூட்டவும்  இதை உபயோகித்தார்கள்.

 

08.   இதன் வேர் பல் வியாதிகளுக்குப் பயன் படும்.

 

09.   கார்போகரிசி இலை அமீபாவால் வரும் வயிற்றுப் போக்கிற்கும், புண்களை ஆற்றவும்  வல்லது.

 

10.   கார்போகரிசி பழம் வாந்தி, மூலம், இரத்த சோகை, சுவாச சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும். முடிவளரவும் பயன் படுத்தப் பட்டது. 

 

11.   கார்போகரிசி வயிற்று வலி, முதுகு வலி, கிட்னிகள் சம்பந்தப் பட்ட நோய்களையும் குணப் படுத்தும். இது தாது விருத்தியுண்டாக்கி உடல் வன்மை பெறப் பயன்  படும்.

 

12.   கார்போகரிசி  விதையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை இருதய சம்பந்தமான நோய்களுக்கும், யானைக்கால்  வியாதியைக் குணப்படுத்தவும், இரத்த ஓட்ட  சம்பந்தமான வியாதியை சீர் செய்யவுதோல் வியாதிகளைக் குணப்படுத்தவும், மற்றும் வெண்  குஷ்டம், குஷ்டம், "AIDS" க்கும் நல்ல மருந்தாகப்  பயன்படுகிறது. 

 

13.   கார்போகரிசியால் கடுவன், விரணம், பயங்கரமான சர்ப்பகீட தாவர விஷங்கள், வாத சிலேத்தும தொந்தம், தினவு, யானைச் சொறி, கிரந்தி ஆகிய இவைகள் நீங்கும். பித்தம் அதிகரிக்கும் என்பர்.

 

14.   தன் சூரணத்தை 5 - 10  குன்றிமணி  எடை சர்க்கரையுடன் கூட்டிக் கொடுக்கலாம். இது தீபத்தை  உண்டாக்கும். மலத்தைப் போக்கும். தோல் சம்பந்தமான பல வியாதிகளைக் குணப் படுத்தும். விஷேசமாக இந்த சரக்கை வாசனைத் திரவியங்ளிலும் உபயோகப் படுத்துவதுண்டு.

 

15.   சந்தனாதிச் சூரணம்-- கார்போக அரிசி, நீரடிமுத்து, கஸ்தூரி மஞ்சள், கோரைக் கிழங்கு, சந்தனத்தூள், அகில் கட்டை, தேவதாரு, கற்பாசி, வெட்டிவேர், குருவி வேர், ஆக பத்து சரக்குகளையும் வகைக்குப் பலம் ஒன்றாக இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு  குளிக்கும் போது இச்சூரணத்தை நீர் விட்டுக் குழைத்துத் தேகமெங்கும் பூசித் தேய்த்து 5 - 10  நிமிடம் வரை ஊற விட்டுப் பின் நன்றாய்த் தேய்த்துக் குளிக்கவும். இப்படி ஒரு மாதம் செய்ய சொறி, சிரங்கு, நமைச்சல்,  படை, தவளைச் சொறி, கருமேகம், இரத்தக் கொதிப்பினால் உண்டாகும் பல நிற வடுக்கள் யாவும் போம்.

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )03]

{17-05-2021}

 

==================================================

கார்போகரிசி


கார்போகரிசி


கார்போகரிசி


கார்போகரிசி


கார்போகரிசி

                              


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக