தமிழ் மூலிகை !

இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 2 ஜூன், 2021

ஜாதிக்காய்

 

        மூலிகைப் பெயர்.........................................சாதிக்காய்

        மாற்றுப் பெயர்................................................குலக்காய்

        தாவரவியல் பெயர்..............................................................

        ஆங்கிலப்பெயர்.................................................NUT MEG

==============================================


01.   சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவை எடுத்து அரைத்து பருக்களின் மேல் தடவி வந்தால், பருக்கள் மறையும்.(1179)

 


02.   சாதிக் காய்ப் பொடியை அளவாக பாலில் கலந்து இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி மிகும். ஆனால் அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கம் வரும்.(301)

 

03.   சாதிக் காயைத் தண்ணீர் விட்டு அரைத்து தொப்புளைச் சுற்றிப் பற்றுப் போட்டால் பேதி நிற்கும்.(722)

 

04.   சாதிக்காய், சாதிப்பத்திரி, கிராம்பு, சிவப்பு அழிஞ்சல் தூள் ஆகியவை சம எடை எடுத்து பொடித்து கால் தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொழு நோய் குணமாகும்.(946)

 

05.   சாதிக் காயுடன் நாயுருவி இலைகளை எடுத்து மை போல் அரைத்து தேமலின் மேல் தடவி வந்தால் தேமல்கள் மறையும்.(1009)

 

06.   சாதிக்காய், பருத்திப் பிஞ்சு, அத்திப் பிஞ்சு, சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுத்து வந்தால் அம்மை நோய் குணமாகும்.(1013)

 

07.   சாதிக்காய்ப் பொடி, பிரண்டை உப்பு இரண்டையும் 5 கிராம் அளவுக்கு எடுத்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது இழப்பு  தீரும்.(1450)

 

08.   சாதிக் காயை அரைத்து கரும்படை மீது சில நாட்கள் தடவி வந்தால் கரும்படை நீங்கிவிடும்.(1024) (2003)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

 ==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021} 

==================================================


ஜாதிக்காய் கொட்டை

ஜாதிக்காய் மரம்

ஜாதிக்காய் கொட்டை

ஜாதிக்காய் பழம்

ஜாதிக்காய் பழம்