இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 25 மே, 2021

பவளமல்லி

 

                   மூலிகைப் பெயர்....................... பவளமல்லி

                   மாற்றுப் பெயர்கள்.......................பாரிஜாதம்

                   தாவரவியல் பெயர்...........................................

                   ஆங்கிலப் பெயர்..................CORAL JASMINE

 ==================================================

01.      பவளமல்லி சிறு மர வகையைச் சார்ந்தது. இதனுடைய பூக்காம்பானது பவள நிறத்தை ஒத்திருப்பதால் இதற்குப் பவளமல்லி என்று பெயர். (Harish)

 

02.      பவளமல்லியின் இலை, பூ, பட்டை, விதை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. (Harish)

 

03.      பவளமல்லியின் நான்கு அல்லது ஐந்து இலைகளை எடுத்து, தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தினமும் இரண்டு வேளை 50 அல்லது 60 மி.லி வீதம் அருந்தி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை குறையும். (Harish)

 

04.      பவளமல்லி இலைச் சாற்றுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் இருமல் குறையும். (Harish)

 

05.      பவளமல்லி  இலையை அரைத்துப் பூசி வந்தால் படர் தாமரை விலகும். (Harish)

 

06.      பவளமல்லி இலை, பவளமல்லி மரப்பட்டை மற்றும் துளசி இலை இவைகளுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து தினசரி காலை மாலையாக மூன்று நாட்கள் 60 மி.லி வீதம் அருந்தி வந்தால் சுரம் தணியும். (Harish)

 

07.      பவளமல்லி இலையையும் பனங் கற்கண்டும் சேர்த்துக் கசாயம் வைத்து காலை மாலையாக 60 மி.லி. வீதம் அருந்தி வந்தால் டெங்கு காய்ச்சல் தணியும். (Harish)

 

08.      ஒரு தேக்கரண்டி பவளமல்லி இலை சாற்றுடன் சிறிது உப்பும் சேர்த்து வாரம் ஒரு முறை 60 மி.லி வீதம் அருந்தி வந்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கிவிடும். (Harish)

 

09.      பவளமல்லி விதையைப் பொடித்து அரைத் தேக்கரண்டி தேனுடன் சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் அண்டாது. (Harish)

 

10.      வறட்டு இருமலுக்கு, பவளமல்லி இலைப் பொடியை இரண்டு கிராம் எடுத்து வெற்றிலைச் சாறு கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் இருமல்  குணமாகும். (Harish)

 

11.      புழு வெட்டிற்கு, பவளமல்லி விதையின் விழுதை அந்த இடத்தில் தினமும் தடவி வந்தால், கொட்டிய இடத்தில் முடி முளைக்கும். (Harish)

 

12.      சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சலுக்கு, பவளமல்லி இலைகள் ஊறிய நீரைக் குடித்து வந்தால் சரியாகும். (Harish)

 

13.      பவளமல்லி இலைச் சாற்றை 10 முதல் 20 மி.லி வரை பருகி வந்தால் ஈரல் வலுவடையும். (Harish)

 

14.      பவள மல்லி இலையைக் கசாயமாகாவோ அல்லது பொடியாகவோ செய்து சாப்பிட்டால் முடக்கு வாதத்தினால் ஏற்படும் வலி மற்றும் காய்ச்சல் குறையும். (Harish)

 

15.      (ஆதாரம்: டாக்டர்.வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D (s) ஸ்ரீ சாய் ஹெர்பல்ஸ்  வேலூர், அவர்களின் கட்டுரை, தினமலர், பெண்கள் மலர், நாள். 21-10-2017)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )11]

{25-05-2021} 

===================================================


பவளமல்லி

பவளமல்லி

பவளமல்லி

பவளமல்லி


பவளமல்லி