மூலிகைப் பெயர்..........................................வல்லாரை
           மாற்றுப் பெயர்கள்...........................................................
           தாவரவியல் பெயர்......................CENTELLA ASIATICA
           ஆங்கிலப்பெயர்.........................INDIAN
PENNY WORT
===================================================
01.      வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கிக் கட்டிவர அரையாப்புக் கட்டி
குணமாகும். (1025) (1568)
02.      வல்லாரை இலையுடன் தூதுவேளை இலையைச் சேர்த்து அரைத்து  பாலில்
கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள சளிக்கட்டு
நீங்கும்.  (209) 
(1606)
03.      வல்லாரை இலைப் பொடி, தூதுவேளை இலைப்பொடி இரண்டையும் கலந்து ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து அருந்தி வந்தால் சுவாச உறுப்புகளில் சளித் தேக்கம்
நீங்கும்.  (1606)
04.      வல்லாரை இலை, உத்தாமணி இலை இரண்டையும் நிழலில் காயவைத்து பொடி செய்து    ஒன்றாகக்
கலந்து அதிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு வலி குறையும். (585)
05.      வல்லாரை இலைகளைச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.     (743) (1177)
06.      வல்லாரைப் பொடி 150 கிராம், வசம்புப் பொடி 15 கிராம்    இரண்டையும் கலந்து அதிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.   (751)  (1912)
07.      வல்லாரைக் கசாயம் நினைவாற்றலைத் தூண்டும்.  (791)
08.      வல்லாரைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் குணமாகும்.  (1047) (1268) 
(1880)
09.      வல்லாரைக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வந்தால் யானைக் கால் வீக்கம் குணமாகும்..  (1607)
10.      வல்லாரை இலைப் பொடி காலை மாலை நெய்யில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் குணமாகும்.  (1578) 
11.      வல்லாரை இலைப் பொடியை காலை மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால்  மூளை பலத்தைத் தரும்.  (1596) 
சுறு சுறுப்பைத்
தரும்.  (1605)
12.       வல்லாரை,
கீழாநெல்லி இரண்டையும் அரைத்து ஒரு கிராம் எடுத்து காலையில் மட்டும் தயிரில் கலக்கி அருந்தி வந்தால் நீர் எரிச்சல் குணமாகும்.     (1622)
13.      வல்லாரை, உத்தாமணி, மிளகு ஆகியவற்றை அரைத்து பருப்பு அளவு மாத்திரையாக்கி வைத்துக் கொண்டு ஒருமாத்திரை எடுத்து  வெந்நீரில்
சாப்பிட்டு வந்தால் எல்லாக் காய்ச்சலும் நீங்கும்.   
(1623) (1690)
14.      வல்லாரைச் சாற்றில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலியை சாப்பிட்டு வந்தால் மூளை சுறு சுறுப்பாக இயங்கும்.  (1624) 
தொண்டைக்
கர கரப்பு நீங்கும்.  (1640)
15.      வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வந்தால் நெறிக் கட்டிகள் குணமாகும்.  (1636)
16.      வல்லரை இலை, உத்தாமணி இலைகளை அரைத்து ஒரு கிராம் அளவு எடுத்து 4 நாட்கள் மட்டும் வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் சூதகச் சிக்கல் தீரும்.  (1641)
17.      வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டி வந்தால் அண்ட வாயு தீரும்.  (1734)
18.      வல்லாரைப் பொடி, சோம்புப் பொடி தலா அரைத் தேக்கரண்டி எடுத்து தேனில் சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி பெருகும்.  (642)
19.      வல்லாரை சூரணத்தை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் நெறிக்கட்டு நீங்கும்.  (464)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:- 
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” 
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் 
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்
 மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்  குறிப்பு:
  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை,
[தி.பி:2052,விடை(வைகாசி
)18]
{01-06-2021}
![]()  | 
| வல்லாரை | 
![]()  | 
| வல்லாரை | 
![]()  | 
| வல்லாரை | 
![]()  | 
| வல்லாரை | 
![]()  | 
| வல்லாரை | 




