இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 1 ஜூன், 2021

முடக்கத்தான்

 

      மூலிகைப் பெயர்........................................முடக்கத்தான்

      மாற்றுப் பெயர்கள்.................................முடக்கறுத்தான் 

      .......................................................................முடக்கொற்றான்

      தாவரவியல் பெயர்.....CARDIOSPERMUM HALICACABUM

      ஆங்கிலப் பெயர்..........................BALLOON VINE GREENS

      சுவை.........................................................................,: துவர்ப்பு

      தன்மை......................................................................: வெப்பம்

 

================================================

 

01.  மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறுகொடி

 

02.  முடக்கத்தான் கொடியின் இலை வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.

 

03.  முடக்கத்தான் மலமிளக்கும். மூக்கில் நீர் பெருக்கி தும்மல் உண்டாக்கும் தன்மை உடையது.

 

04.  முடக்கற்றான் மூலிகையானது ,கீல் வாதம், சினைப்பு, கிரந்தி, கரப்பான் பாதத்தைப் பற்றிய வாதம் ஆகியவற்றைப் போக்கும்.

 

05.  முடக்கத்தான் இலை, வேர் முதலியவைகளைக் குடிநீர் செய்து அருந்தினால் வாதம, மூலம், நாட்பட்ட இருமல் ஆகியவை போகும்

 

06.  முடக்கத்தான் இலைப் பொடியுடன் சித்திரமூல வேர்ப் பட்டைப் பொடி, கரிய போளம் ஆகியவை சேர்த்து மூன்று நாள் கொடுக்க சூதகக் கட்டு நீங்கும்.

 

07.  முடக்கத்தான் இலைகளை வதக்கி அடிவயிற்றில் கட்டச் சூதகத்தை மிகுதிப்படுத்தி சூலக அழுக்குகளை வெளிப்படுத்தும்

 

08.  முடக்கத்தான் இலையை நல்லெண்ணையில் இட்டுக் காய்ச்சி, அந்த எண்ணையை வலிகளுக்குப் பூசலாம்.

 

09.  முடக்கத்தான் இலைச் சாற்றைக் காதில் விட, காது வலி, சீழ் வடிதல் ஆகியவை நீங்கும்

.

10.  முடக்கற்றான் கீரையை இரசம் வைத்து உண்டால் சிறுநீர் பெருக்கும், மலமிளக்கும், பசியைத் தூண்டும், வாதத்தை அடக்கும், உடலை வலிமைப்படுத்தும்.

 

11.  முடக்கத்தான் இலைச் சாறில் சீரகப் பொடியைப் போட்டு ஊறவைத்து வடிகட்டி, சில துளிகள் காதில் விட்டு வந்தால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.  (061)

 

12.  முடக்கத்தான் இலையை அவித்து சாறு எடுத்து இரசம் வைத்து உண்டு வந்தால் மலச் சிக்கல், வாயு ஆகியவை தீரும்.  (380) (1521) (1558)

 

13.  முடக்கத்தான் இலை, சீரகம் சேர்த்து கசாயம் வைத்து சாப்பிட்டால்   உடல்வலி தீரும்.(745) (756)

 

14.  முடக்கத்தான் இலையை அரைத்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட்டால்  வாதம், பிடிப்பு குணமாகும்   (1104) (1559)

 

15.  முடக்கத்தான் சூப் தினசரி சாப்பிட்டு வந்தால், தேநீர், காப்பிக்குப் பதில் பார்லி நீர் சாப்பிட்டு வந்தால், பூண்டு வேக வைத்த பால் சாப்பிட்டு வந்தால், பூண்டை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாத நோய்கள் விலகி ஓடும்.  (1109)

 

16.  முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வந்தால், வாதப் பிடிப்பு, வாத வீக்கம் தீரும்.  (1560)

 

17.  முடக்கத்தான் இலையை வாட்டி சாறு பிழிந்து இரண்டு துளிகள் காதில்விட்டால், காது வலி தீரும்.  (1561)

 

18.  முடக்கத்தான் வேர் ஒரு பிடி எடுத்து நீர் விட்டுக் காய்ச்சி, கசாயம் செய்து வேளைக்கு 100 மி.லி வீதம் 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலம் தீரும்.  (1545)

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

=======================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )18]

{01-06-2021} 

=======================================================


முடக்கத்தான்

முடக்கத்தான்

முடக்கத்தான்

முடக்கத்தான்

முடக்கத்தான்