மூலிகைப் பெயர்.................................. ..முசுமுசுக்கை
மாற்றுப் பெயர்கள்......................................அயிலேயம்
................................இரு குரங்கின் கை,
..............................................................மொசுமொசுக்கை
தாவரவியல் பெயர்...........................MUKIA
SCAVIRLLA
ஆங்கிலப் பெயர்............................
சுவை......................................................................துவர்ப்பு
தன்மை..................................................................வெப்பம்
செய்கை.............................................கோழை அகற்றும்
01. முசுமுசுக்கை என்பது சுணையுடைய இலைகளையும் செந்நிறப் பழங்களையும் உடைய பற்றுக் கம்பிகள் உள்ள ஏறுகொடி
02. முசுமுசுக்கையின் இலை வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை
03. முசுமுசுக்கை இலை கோழை அகற்றும் தன்மை உடையது. வேர், பசி மிகுத்தல், நஞ்சு நீக்குதல், சளி அகற்றுதல் ஆகிய குணங்களை உடையது.
04. முசுமுசுக்கை இலையானது கோழை, இரைப்பு, நெஞ்சில் புகைக் கம்மல், மூக்கில் நீர் பாய்தல் ஆகியவற்றை நீக்கும்
05. முசுமுசுக்கை வேரானது தீநாற்றத்துடன் இறுகிய கோழை,
ஆண்மையின்மை, மந்தம், வாந்தி, மார்பு நோய், குன்மம் (வயிற்று வலி) அழல் (எரிச்சல்) ஆகியவற்றை நீக்கும்.
06. முசுமுசுக்கை இலைச் சாற்றில் சிறிது கோரோசனை சேர்த்துக் கொடுக்க மேற்கூறிய நோய்களை நீக்கும்
07. முசுமுசுக்கை இலையை ஊற வைத்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து அரைத்து, சிறிது உப்புக் கூட்டி, அடை சுட்டுக் கொடுத்துவர கோழைக்கட்டு, இருமல், ஈளை
நீங்கும்
08. முசுமுசுக்கை வேரை உலர்த்திப் பொடியாக்கி அல்லது குடி நீர் செய்து கொடுக்க வாந்தி,
மார்பு நோய் முதலியன நீங்கும்.
09. முசுமுசுக்கை இலைச் சாற்றுடன் சம அளவு நல்லெண்ணை கலந்து காய்ச்சி வாரம் ஒருமுறை தலை முழுக இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி தீர்வதுடன் கண் எரிச்சல், உடம்பு எரிச்சல் தீரும்.
10. முசுமுசுக்கை இலைச் சாறு சம அளவு நல்லெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி,
வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து, தலைமுழுகி வந்தால் உடல் எரிச்சல், கண் எரிச்சல்
ஆகியவை தீரும். (013) (1741) தேகக் காந்தல் தீரும். (1023) (1635) ஆஸ்துமா தீரும் (1660)
11. முசுமுசுக்கை இலைகளை மழைக் காலங்களில் சாப்பிட்டு வந்தால் சளி,
இருமல் வரவிடாமல் தடுக்கலாம். (115)
12. முசுமுசுக்கை இலையை நெய் விட்டு வதக்கி பகல் உணவுடன் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா தீரும். (1068)
13. முசுமுசுக்கை இலையை அரிந்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல்
உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, மூச்சுத் திணறல் குணமாகும். (1071)
14. முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது. (1257)
15. முசுமுசுக்கை இலையை அரைத்து தோசை மாவுடன் சேர்த்து தோசை சுட்டுச் சாப்பிட்டு வந்தால், சளி, சுரம் ஆகியவை குணமாகும். (1646) நீர்க்கோவை தீரும் (1573) மூக்கு ஒழுகல் தீரும் (1594)
16. முசுமுக்கை இலைப் பொடி, தூதுவேளை
இலைப் பொடி, கருவேலம் பிசின் ஆகியவற்றை வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் என்புருக்கி நோய்
தீரும். (1621)
17. முசுமுசுக்கை இலைச் சூரணம், தூதுவேளை இலைச் சூரணம் இரண்டையும் கலந்து இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய் குணமாகும். (365)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
===========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்
மூலிகை,
[தி.பி:2052,விடை(வைகாசி )18]
{01-06-2021}
===========================================================
முசுமுசுக்கை |
முசுமுசுக்கை |
முசுமுசுக்கை |
முசுமுசுக்கை |