மூலிகைப்
பெயர்..................................................ரோஜா
        மாற்றுப்
பெயர்...............................................வனமல்லி
        தாவரவியல்
பெயர்.................................................
        ஆங்கிலப்பெயர்.........................................................ROSE
===================================================
01. ரோஜாப் பூவை ஊற வைத்து, கசக்கிப் பிழிந்து, அந்தச் சாறுடன் சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் மூலச் சூடு குணமாகும். (336) (1927)
02.   ரோஜா இதழ்களை நிழலில் உலர வைத்து இடித்து சீயக்காயுடன் சேர்த்து தலைக்குத் தேய்த்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.  (747)
03.   ரோஜா இதழ்களை வாயில் போட்டு மென்று தின்றால் வாய்ப் புண்கள் குணமாகும்.   (1195)
04.   ரோஜாப்பூ, கற்கண்டு, தேன் சேர்த்து கலந்து வெயிலில் வைத்து தினசரி சிறிது சாப்பிட்டு வந்தால் ஆசன வாய், நுரையீரல் பலமாகும். (1577) சிறுநீரகம் பலமாகும்.  (1595) இதயம் பலமாகும்.  (1616)
05.   ரோஜாப்பூ கசாயம் வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண்கள் குணமாகும்.  (1613) 
06.   ரோஜாப் பூவைக் கசாயம் வைத்து இரணங்களைக் கழுவி
வந்தால் அவை ஆறி அந்த இடத்தில் சதை வளரும்.  (1614)
07.   ரோஜாப்பூக் கசாயம் வைத்து பால், சர்க்கரை கூட்டி சாப்பிட்டு வந்தால் பித்த நீர் மலத்துடன்  வெளியேறும்.  (1615)
08.   ரோஜாப்பூ குல்கந்து காலை மாலை இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால் கருப்பை பலமடையும்.  (606)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:- 
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” 
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் 
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்
 மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்  குறிப்பு:
  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !



