இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 1 ஜூன், 2021

முருங்கை

           மூலிகைப் பெயர்.........................................முருங்கை.

           மாற்றுப் பெயர்கள்................................. xxxxxxxxxxxxx

           தாவரவியல் பெயர்....................MORINGA OLEIFERA

           ஆங்கிலப்பெயர்........................................DRUM STICK

           சுவை......................................................................கைப்பு

           தன்மை,..............................................................வெப்பம்

 

==================================================

 


1)    முருங்கையானது மென்மையான சிறகு கூட்டிலைகளையும். வெண்ணிற மலர்களையும் தக்கையான நீண்ட காய்களையும், சிறகுள்ள விதைகளையும், மென்மையான கட்டையையும் கொண்ட மரம். (Harish)

 

2)    முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, பிசின், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் உடையவை. (Harish)

 

3)    முருங்கை இலையில் வைட்டமின்”, “சி”, கால்சியம், இரும்பு, கந்தகச் சத்து ஆகியவையும் அமினோ அமிலமும் இருக்கின்றன. (Harish)

 

4)    முருங்கை இலைச் சாறு அதிக அளவில் வாந்தியுண்டாக்கும். சில வேளைகளில் மலமிளக்கும். ஈர்க்கு சிறுநீர் பெருக்கும். பூ காமம் பெருக்கும். பிஞ்சு தாது எரிச்சல் போக்கும். காமம் பெருக்கும். (Harish)

 

5)    முருங்கைக் காய் கோழை அகற்றி, காமம் பெருக்கும். பிசின் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். மூக்கில் நீரைப் பெருக்கித் தும்மல் உண்டாக்கும். காமம் பெருக்கும். (Harish)

 

6)    முருங்கை மரப்பட்டை, கோழை அகற்றும். காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றைப் போக்கும். வியர்வையைப் பெருக்கும். குடல் வாயு அகற்றும். (Harish)

 

7)    முருங்கைக் கீரையை உணவாகக் கொள்ள, கபம், பித்த மயக்கம், கண் நோய், செரியா மந்தம் தீரும். (Harish)

 

8)    முருங்கை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, மூட்டு வலி, வாத வலி, இடுப்பு வலி ஆகியவற்றுக்கு ஒற்றடம் கொடுக்கலாம். (Harish)

 

9)    முருங்கை இலைப் பொறியலை நெய்யுடன் சாப்பாட்டுக்குத் தொடக்கத்தில் 40 நாள்கள் சாப்பிட வாலிப மிடுக்கும் வீரியமும் உண்டாகும். (Harish)

 

10)   முருங்கை ஈர்க்குகளைச் சேகரித்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து குடிநீர் செய்து அருந்தி வந்தால்  கை கால் அசதி, உடம்பு வலி தீர்க்கும். (Harish)

 

11)   முருங்கைப் பூவில் Pterysospermin என்ற சத்து இருப்பதால் இது பூச்சிக் கொல்லியாகவும் antibiotic ஆகவும் செயல்படும். (Harish)

 

12)   முருங்கைப் பூவைப் பருப்புடன் சமைத்துண்னக் கண் எரிச்சல், வாய் நீர் ஊறல், வாய்க் கசப்பு மாறும். (Harish)

 

13)   முருங்கைப் பூவைப் பறித்து வந்து பாலில் இட்டுக் காய்ச்சி இரவில் சாப்பிட ஆண்மை பெருகும். (Harish)

 

14)   முருங்கைக் காயை அளவுடன் சாப்பிட்டு வந்தால் , மார்புச்சளி, கபம் ஆகியவை தீரும். (Harish)

 

15)   முருங்கை மரப் பட்டையை நீரிலிட்டு அவித்துச் சாறெடுத்து ரசமாக்கி உணவுடன் சாப்பிட்டு வரக் குளிர் காய்ச்சல், பாரிச வாயு, காக்கை வலிப்பு, சூதக சன்னி ஆகியவை தீரும் (Harish)

 

16)   முருங்கை மரப் பட்டையைக் கடுகு சேர்த்து அரைத்துப் பற்றுப் போட்டால் கீல் வாதம் தீரும். எரிச்சல் கண்டால் குளிர் நீரால் கழுவி விடவும். (Harish)

 

17)   முருங்கைப் பிசினை உலர்த்திப் பொடி செய்து, அரை தேக்கரண்டி, பாலில் காலை மாலை கொள்ள தாது பலம் உண்டாகும். மிகுதியாகச் சிறுநீர் கழித்தல் தீரும். உடல் வனப்பு உண்டாகும். (Harish)

 

18)   முருங்கைக் கீரையில் வைட்டமின்இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் உதவும். நெய்யில் வறுத்து உணவுக்கு முன் சாப்பிட்டால் கண்கள் ஒளிபெறும். (Harish)

 

19)   முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து இருப்பதால், இரத்த சோகைக்கு மிகுந்த பயன் அளிக்கும். அதற்கு முருங்கை இலையைக் கூட்டாகவோ, துவட்டியோ உணவுடன் அருந்தலாம். (Harish)

 

20)   முருங்கை இலைச் சாறினை குழந்தைகளுக்கு மார்புச் சளி அதிகமாக  இருக்கும் போது, ஒரு தேக்கரண்டி அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தை வாந்தி எடுக்கும். வாந்தியுடன் சளியும் சேர்ந்து வெளியே வந்து விடும். (Harish)

 

21)   முருங்கை இலையில் கால்சியம் சத்து இருப்பதால், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். எலும்பையும் பலப்படுத்தும். அதற்கு முருங்கை இலையை ரசமாக அருந்தலாம். (Harish)

 

22)   முருங்கை இலைச்சாறு மலச் சிக்கலைப் போக்கி, குடலைச் சுத்தம் செய்யும். (Harish)

 

23)   முருங்கை இலையைச் சமைத்து உண்பதால், வயிற்றுப் புண்கள் ஆறும். இரத்தத்தைச் சுத்திகரிக்கும். கை, கால்களில் ஏற்படும் வீக்கம் கரையும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். (Harish)

 

24)   முருங்கை இலைச் சாற்றுடன் மிளகுப்பொடியும் சேர்த்துக் குழைத்து தலையில் பற்று இட்டால் தலைவலி தீரும்.(Harish)

 

25)   முருங்கைக் கீரையை நெய் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வாலிபமும் வீரியமும் உண்டாகும். (Harish)

 

26)   முருங்கை ஈர்க்குடன் கறிவேப்பிலை ஈர்க்கும் சேர்த்து, குடிநீர் செய்து மூன்று நாட்கள் இரவில் 60 மி.லி வீதம் குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். (Harish)

 

27)   பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிடுவதால், பால் நன்றாகச் சுரக்கும். (Harish)

 

28)   முருங்கை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, இடுப்பு வலி, மூட்டு வலி உள்ள இடத்தில் ஒற்றடம் கொடுத்தால் வலி தீரும்.(Harish)

 

29)   முருங்கை இலைச் சாற்றுடன் சிறிது சுண்ணாம்பும் தேனும் கலந்து தொண்டையில் பூசினால், தொண்டைக் கட்டு தீரும். (Harish)

 

30)   முருங்கைப் பூவைப் பாலுடன் சேர்த்து வேகவைத்து உண்பதால், கண்ணிற்குக் குளிர்ச்சி ஏற்படும்; விந்துவைப் பலப்படுத்தும். (Harish)

 

31)   ஒருசில மருந்துகள் சாப்பிடும் போது கடைப் பிடிக்கும் பத்திய காலத்தில் முருங்கைப் பிஞ்சை சமைத்து உண்ணலாம். (Harish)

 

32)   முருங்கைப் பூவிலிருந்து பிஞ்சு தோன்றியவுடன் எடுத்து சமைத்து தோலுடன் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணியும்; ஆண்மை அதிகரிக்கும். (Harissh)

 

33)   முருங்கைப் பிசினை எடுத்துக் காய வைத்துப் பொடி செய்து அரைத் தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து அருந்தி வந்தால்  உடல் பலம் பெறும். (Harish)

 

34)   முருங்கைப் பிசினை வெந்நீரில் கரைத்து  வடிகட்டி மூன்று துளிகள் காதில் விட்டால், காது வலி தீரும்.  (Harish)

 

35)   முருங்கைப் பட்டை சாற்றுடன், குப்பை மேனிச் சாறும் சேர்த்து, சமபங்கு தேங்காய் எண்ணெயும் சேர்த்து, சொறி, சிரங்குகளின் மீது தடவினால் அவை குணமாகும். (Harish)

 

36)   முருங்கை விதையைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து இரண்டு வேளை வீதம் சில நாட்கள் சாப்பிட்டால் நீர்த்துப் போன விந்து கெட்டிப்படும். (Harish)

 

37)   (தொ.எண். 3, 11, 18 – 36, வரை ஆதாரம் :- வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவமனை, முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s) அவர்கள், 01-04-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

 

38)   முருங்கைக் கீரையை வேக வைத்து  அத்துடன் எள்ளைப் பொரித்துப் போட்டு கலந்து உண்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். (339)

 

39)   முருங்கை இலையைக் கசக்கிச் சாறு எடுத்து சிறிது சூடு காட்டி  அரைச் சங்கு குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் மலக்கட்டு, வயிற்று உப்பிசம் ஆகியவை நீங்கும்.  (358)

 

40)   முருங்கை கீரை, தவசிக் கீரை ஆகியவை சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.  (489) (1894)

 

41)   முருங்கைக் கீரையைத் துவரம் பருப்புடன் சேர்த்து ஒரு கோழி முட்டை உடைத்து ஊற்றிக் கிளறி, நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.  (538)

 

42)   முருங்கைக் கீரையை நிழலில் உலர்த்தி  பொடி செய்து  காலை, மாலை பசும் பாலில் சாப்பிட்டு வந்தால் ஹிஸ்டீரியா நோய் சரியாகும். (976) (1941)

 

43)   முருங்கைக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் கண் நோய் சரியாகும்.  (1131)

 

44)   முருங்கைக் கீரையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவற்றுக்கு ஒற்றடம் கொடுக்கலாம்நிவாரணம் கிடைக்கும்.  (1569)  வாத வலி  தீரும்.  (1739)

 

45)   முருங்கை இலைப் பொரியலுடன் நெய் சேர்த்து உணவுடன் 48 நாட்கள் உட்கொண்டு வந்தால் தாது விருத்தியாகும்.  (1570)

 

46)   முருங்கை ஈர்க்கு எடுத்து இரசம் வைத்துச் சாப்பிட்டால், உடல் அசதி, கை, கால் வலி ஆகியவை தீரும்.  (769) (1998) முருங்கை ஈர்க்குக் கசாயம் வைத்துச் சாப்பிட்டாலும் உடல் அசதி, கை, கால் வலி தீரும்.  (1571)

 

47)   முருங்கைப் பூ, புடலம் பூ, துளசி இலை, எலுமிச்சை இலை ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைச் சாப்பிட்டால் தீராத தாகமும் தீரும்.   (272)

 

48)   முருங்கைப் பூக்களைப் பறித்து சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சிசிறிது பாலுடன் கலந்து குடித்து வந்தால் தாது விருத்தி ஆகும். (479)

 

49)   முருங்கைப் பூக்களை பாலில் இட்டுக் காய்ச்சி இரவில் சாப்பிட்டு வந்தால்  ஆண்மை பெருகும்.   (517)  (1591) (2020)

 

50)   முருங்கைப் பூவைப் பருப்புடன் சமைத்து உண்டு வந்தால் கண் எரிச்சல் தீரும்.   (1572)  வாய்க் கசப்பு மாறும்.  (1590)

 

51)   முருங்கைப் பிஞ்சுகளை நசுக்கிச் சாறு எடுத்து, அத்துடன் சிறிது தேன் கலந்து காலை மாலை இரண்டு வேளைகளாக மூன்று நாட்கள் சாப்பிட்டால் ஜலதோஷத்திலிருந்து விடுபடலாம்.  (149)

 

52)   முருங்கை வேர், துளசி வேர் ஆகியவற்றை அரைத்து பாலில் கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் உடல் நிறம் சிவக்கும்..  (1763)

 

53)   முருங்கைப் பட்டைச் சாறு, வெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை தனித்தோ , சேர்த்தோ தினமும் உட்கொண்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.  (1073)

 

54)   முருங்கைப் பட்டையை அவித்து சாறு எடுத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் காக்காய் வலிப்பு குணமாகும்.   (1083)

 

55)   முருங்கைப் பட்டையை அவித்து சாறு எடுத்து இரசமாக்கி அருந்தி வந்தால் குளிர் காய்ச்சல் குணமாகும். (1592)  காக்காய் வலிப்பு குணமாகும்.  (1618)

 

56)   முருங்கைப் பட்டையுடன் சிறிது கடுகு சேர்த்து அரைத்துப் பற்றிட்டால் கீல் வாதம் குணமாகும்.  (1619)

 

57)   முருங்கைப் பிசினைப் பொடி செய்து அரை கரண்டி பாலில் கரைத்து காலை, மாலை அருந்தி வந்தால் தாது பலம் உண்டாகும்.   (1620)  உடல் வனப்பு உண்டாகும்.  (1633) அதி மூத்திரம் சரியாகும்.  (1659)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

=====================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )18]

{01-06-2021} 

======================================================


முருங்கை

முருங்கை

முருங்கை

முருங்கை

முருங்கை