மூலிகைப் பெயர்............................................மிளகாய்
மாற்றுப் பெயர்................................................................
தாவரவியல் பெயர்.......................
ஆங்கிலப் பெயர்.................................................CHILLY
====================================================
01. மிளகாய் செடியானது பரவலாக எல்லா இடங்களிலும் பயிர் செய்யப் படும் ஒரு தாவரம்.
02. வேல் வடிவ இலைகளையும், வெண்மை நிறப் பூக்களையும், பச்சை நிறக் காய்களையும் உடைய மிளகாய்ச் செடி, சிவப்பு நிறப் பழங்களை தருகின்ற ஒரு பயனுள்ள செடி.
03. மிளகாய்ச் செடியின் காயும் பழமும் காரச் சுவை உடையவை. உணவு தயாரிப்பில் இவை முக்கிய இடத்தை வகிக்கிறது.
04. மிளகாய் வற்றல் இரண்டினை எடுத்து, புதிய மண் சட்டியில் போட்டு, அதை அடுப்பில் வைத்து மிளகாய் கருகும் வரை வறுக்க வேண்டும். பிறகு கருகிய மிளகாய்களை எடுத்து விட்டு, சட்டியில் மூன்று தம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். இந்த கொதிநீரை, நன்றாக ஆறிய பிறகு எடுத்துப் பருகி வந்தால் வாந்தி பேதி நிற்கும். (100)
05. மிளகாய் வற்றலை அரைத்து அடிபட்ட காயங்கள் மீது வைத்துக் கட்டினால், சீழ் பிடிக்காமல் ஆறும்.
(1528)
06. மிளகாய் வற்றல், அல்லது மிளகு நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் எப்படிப்பட்ட தலைவலியும் தீரும். (1529)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்
மூலிகை,
[தி.பி:2052,விடை(வைகாசி )17]
{31-05-2021}
=================================================
பச்சை மிளகாய் |
வெள்ளை மிளகாய் |
மிளகாய்ப் பூ |
மிளகாய்ப் பழம் |