மூலிகைப் பெயர்..............................மாவிலங்கை
மாற்றுப் பெயர்கள்.........மாவிலங்கு, குமாரகம்,
....................................................மரவலங்கா, வரணி,
தாவரவியல் பெயர்.......................CAPPARACEEAE
ஆங்கிலப் பெயர்................CRATAEVA RELIGIOSA
சுவை................................................................கைப்பு
தன்மை..........................................................வெப்பம்
================================================
1)
மாவிலங்க
மரம் விரல்கள் போன்ற
மூன்று கூட்டிலைகளையும் மலர்ந்ததும் மஞ்சளாகும் வெண்ணிற மலர்களையும் செந்நிற உருண்டையான சதைக் கனியினையும் உடைய
வெண்ணிற மரம்.
2) மாவிலங்க
இலை, வேர்,
பட்டை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை.
3)
மாவிலங்க
இலையை குடிநீரிட்டுக்
கொடுக்க, சுரம், செரியாமை போகும். இலையை அரைத்துப் பற்றுப் போட்டால் வீக்கம் கரையும்.
4) மாவிலங்க இலையை அரைத்துப் பற்றுப் போட்டால் அனைத்து வகையான வீக்கமும் குணமாகும். (579)
5)
மாவிலங்க
இலைச்சாறும் தேங்காய்ப்
பாலும். சம அளவு எடுத்து 50 மி.லி. கொடுத்துவர கை கால் முடக்கு நீங்கும்.
6)
மாவிலங்க
இலைக் கசாயம் சம அளவு தேங்காய்ப் பால் சேர்த்து மூன்று
வேளைகள் குடித்தால் முடக்கு வாதம் தீரும். (1565)
7)
மாவிலங்க
இலையை உலர்த்திப்
பொடி செய்து புகைத்து, அப்புகையை முகர மூக்கிலுண்டாகும் நோய்கள்
நீங்கும்.
8)
மாவிலங்க
இலையை அரைத்து
உள்ளங்காலில் பற்றுப் போட்டால் வாதம், வீக்கம், எரிச்சல் நீங்கும்.
9)
மாவிலங்க
மரப் பட்டையை எடுத்துக்
குடிநீர் செய்து காலை மாலை அருந்தி வந்தால் கல்லடைப்பு நீங்கும்.
10)
மாவிலங்க
மரப் பட்டையைச் சிதைத்து
அல்லது பட்டையின் உட்புறம் கட்டியின் மேல் படுமாறு வைத்துக் கட்டிவிட்டால், கட்டிகள் கரையும்.
11)
மாவிலங்க
மரப் பட்டை 150 கிராம், மூக்கரட்டை 75 கிராம் எடுத்து ஒன்றரை லிட்டர் நீர் விட்டு ,குடிநீர் செய்து, அதில் 50 மி.லி கொடுத்து வந்தால், புரையோடிய நாட்பட்ட புண்கள், விரை வீக்கம் நீங்கும்.
12)
மாவிலங்கப்
பட்டை, மூக்கிரட்டை வேர் கசாயம் மூன்று வேளை குடித்து வந்தால் விரை வீக்கம் தீரும். (1566)
13)
மாவிலங்க
மரத்தின் வேர்ப்பட்டை கொட்டைப்பாக்களவு அரைத்துக் கொடுத்து
வரப் பாம்பு நஞ்சு, வண்டு நஞ்சு நீங்கும்.
14)
மாவிலங்க
வேரை எடுத்து அதன் பட்டையை உரித்து அரைத்து அதிலிருந்து ஒரு கிராம் எடுத்து உள்ளுக்குக் கொடுத்தால் பாம்பு கடி நஞ்சு, வண்டு கடி நஞ்சு நீங்கும். (1563)
15)
மாவிலங்க
இலையை அரைத்து உள்ளங்கால், உள்ளங் கைகளில் பற்றுப் போட்டால் சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் நீங்கும். (963) (1908)
16)
மாவிலங்க
இலை, சுக்கு, சீரகம் ஆகியவை சேர்த்துக் கசாயம் வைத்து மூன்று வேளைகள் சாப்பிட்டால் வாத சுரம் குணமாகும். (1564)
17)
மாவிலங்கப்
பட்டைக் கசாயம் காலை மாலை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள்
தீரும். (1567) அரையாப்புக் கட்டி கரையும். (1582)
18)
மாவிலங்கப்
பட்டைக் கசாயம்
காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல்லடைப்பு நீங்கும்.
(1541) வயிற்றுப் புண் குணமாகும். (1518) கண்டமாலை புண் குணமாகும். (1593) விஷகடி
தீரும். (1608)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
=========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்
மூலிகை,
[தி.பி:2052,விடை(வைகாசி )17]
{31-05-2021}
=========================================================
மாவிலங்கம் பூ |
மாவிலங்கம் பூ |
மாவிலங்கங் காய் |
மாவிலங்கம் பூ |