மூலிகைப்பெயர்.............................................மருதாணி
மாற்றுப் பெயர்கள்..............................................ஐவான்
தாவரவியல் பெயர்................................
ஆங்கிலப் பெயர்.......................................HENNA PLANT.
===================================================
01. மருதாணி இலை ஒரு கைப்பிடி எடுத்து சிறுதுண்டு மஞ்சளும் ஐந்தாறு கிராம்பும் சேர்த்து அரைத்து காலில் ஆணி உள்ள இடத்தில் இரவில் கட்டி வர வேண்டும் இவ்வாறு மூன்று வாரங்கள் கட்டி வந்தால் ஆணி உதிர்ந்துவிடும்.
02. மருதாணி இலை, மஞ்சள், வசம்பு, சிறிதளவு கற்பூரம் ஆகியவற்றை எடுத்து அரைத்து காலில் கட்டி வந்தால் கால் ஆணி குணமாகும்.
(1488)
03. மருதாணி வேரின் பட்டையை உரித்து அரைத்துக் கட்டி வந்தால் கால் ஆணி குணமாகும். (1045) (1454)
(1478)
04. மருதாணியும் மஞ்சளும் சேர்த்து அரைத்து கால் ஆணி மீது இரவு தோறும் கட்டி வந்தால் கால் ஆணி விரைந்து அற்றுப் போகும். (1044)
05. மருதாணி அரைத்து இடுவதற்கு முன், கைகளை எலுமிச்சம் பழச் சாறினால் கழுவிக் காய விட்டு, பின் மருதாணி இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாகப் பிடிக்கும். (181)
(1949)
06. மருதாணி இலை 50 கிராம், நொச்சி இலை 50 கிராம், எருக்கம் பூ 2 எண்ணிக்கை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, கட்டினால் நகச் சுற்று குணமாகும்.
(316) (1948)
07. மருதாணி இலைகளை அரைத்து சொத்தை நகங்கள் மீது வைத்துக் கட்டி வந்தால் நல்ல நகம் முளைக்கும்.
(1527)
08. மருதாணி இலையுடன் தாய்ப் பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குறையும்.
(407)
09. மருதாணியை எலுமிச்சைச் சாறுடன் கலந்து அரைத்து பாதங்களில் தடவி வந்தால், பாத எரிச்சல் குணமாகும்.
(444)
10. மருதாணி இலையை நில ஆவாரை இலையுடன் சேர்த்து அரைத்து செம்பட்டை முடியில் தடவி வந்தால் முடியின் செம்பட்டை நிறம் மாறி கருமை நிறம் ஆகும். (907)
11. மருதாணி இலையை அரைத்து தண்ணீரில் கரைத்து, சிறு காயங்கள், சிராய்ப்புகளைக் கழுவி வந்தால் அவை விரைவாக ஆறும்.
(1028)
12. மருதாணி இலை, கீழா நெல்லி இலை இரண்டையும் சமமாக எடுத்து அரைத்து, ஆட்டுப் பாலில் கலந்து மூன்று வேளை, 5 கிராம் அளவுக்குக் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை மறையும்.
(1096)
13. மருதாணி இலை, மஞ்சள், பூண்டு, மிளகு ஆகியவற்றை எடுத்து அரைத்து வெறும் வயிற்றில் பெரிய சுண்டைக் காய் அளவுக்கு சப்பிட்டு வந்தால் உடல் நமைச்சல் தீரும்.
(1492)
14. மருதாணி இலை 10 கிராம் எடுத்து பால் விட்டு அரைத்து, பாலிலேயே கலந்து சாப்பிட்டு வந்தால் அதி மூத்திரம் ( மிகையாக சிறுநீர் கழிதல் ) தீரும். (1526)
15. மருதாணி இலை அரைக்கும் போது ஓரிரு நொச்சி இலைகளையும் சேர்த்து அரைத்தால், கைகளுக்கு இட்டுக் கொள்ளும் போது சளி பிடிக்காது.
(1947)
16. மருதாணிப் பூவை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் நாளடைவில் வழுக்கைத் தலையில் முடி முளைக்கும்.
(912)
17. மருதாணிப் பூவை எடுத்து சுத்தம் செய்து இரவு படுக்கப் போகும் முன் இரண்டு கொத்துகளைச் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
(1453)
18. மருதாணியில் முதிர்ந்த மரமாகப் பார்த்து அதன் வேரினை எடுத்து பட்டையை உரித்து பட்டைக் கசாயம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் சதை அடைப்பு குணமாகும்.
(1536)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)14]
{28-05-2021}
மருதாணி |
மருதாணிச்செடி |
மருதாணிக்காய் |
மருதாணிப்பூ |
மருதாணிச் செடி |