மூலிகைப் பெயர்.........................................மருத மரம்
மாற்றுப்பெயர்கள்............................................................
தாவரவியல் பெயர்...........................
ஆங்கிலப்பெயர்........................ARJUNA
MUROBALAN
===================================================
01. மருது மர வகையைச் சார்ந்தது. இதில் இரு வகை உள்ளது. வெண்மை மற்றும் செம்மை நிறம் உடையது. (Harish) இவற்றை
கருமருது, பிள்ளை மருது என்பார்கள். வெள்ளை மருது என்னும் சொல் திரிந்து பிள்ளை மருது என வழங்கி வருகிறது.
02. மருத மரத்தில் இலை, பழம், வித்து, பட்டை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. (Harish)
03. மரப்பட்டையில் டானின், சாப்போனின், கிளைக்கோசைட்ஸ் உள்ளன. கால்சியம் மற்றும் மெக்னீஷியம் சத்துக்களும் உள்ளன. மேலும் (Harish)
04. மேலும் இதில் C0-ENCYME Q-10 உள்ளதால் இதயத்தைப் பலப்படுத்தும். (Harish)
05. மருதம் மனித உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்; புண்களை ஆற்றும்; வயிற்றுப் புண்களைச் சரிசெய்யும்; இரத்த அழுத்தத்தைச் சமன் செய்யும்; பித்த வெடிப்பு சீராகும்; கழிச்சலைக் குணமாக்கும்; உள்ளுறுப்புகளில் ஏற்படும் இரத்தக் கசிவைப் போக்கும். (Harish)
06. மருத மர இலை பத்து கிராம் எடுத்து அரைத்துப் பாலில் கலந்து இரு வேளை மூன்று நாட்கள் குடித்தால் பித்த வெடிப்பு நீங்கும். (Harish)
07. மருத மரத்தின் இலையைக் கசக்கிக் காதில் பிழிந்தால், காது வலி குறையும். (Harish)
08. மருத மரப் பட்டையை இடித்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து 50 – 60 மி.லி வரை தினம் சாப்பிட்டால் இதயம் பலப்படும். (Harish)
09. மருத மரப்பட்டைப் பொடி ஒரு கிராம் எடுத்துத் தேனில் குழைத்து உள்ளுக்குச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும். (Harish)
10. மருத மரப் பட்டைப் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சினைகள் சரியாகும். (Harish)
11. மருத மரப் பட்டைப் பொடியை தேன் கலந்து முகப்பருக்களின் மீது தடவி வந்தால் பருக்கள் மறையும். (Harish)
12. மருத மரத்தின் பழத்தை நன்கு வேக வைத்து, பிசைந்து புண்களின் மீது பற்றுப் போட்டு வந்தால் புண்கள் குணமாகும். (Harish)
13. மருத மரப்பட்டையைப் பொடி செய்து சிறிது உப்பு சேர்த்து, பற்பொடியாக்கி அதனால் பல் துலக்கி வந்தால் பல் வலி மறையும்; பற்கள் இறுகும். (Harish)
14. மருதம் பட்டைப் பொடியை நெய் விட்டு வறுத்த கோதுமை மாவுடன் சேர்த்து அத்துடன் பனை வெல்லமும் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டையாக்கி சாப்பிட்டு வந்தால், இதயப் படபடப்பு நீங்கும். (Harish)
15. மருத மரப் பட்டையைப் பொடித்து மிகுந்த தலைவலி உள்ளவர்களுக்கு மூக்கிலிட, தலைவலி குறையும். (Harish)
16. (ஆதாரம் :- வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவ மனை, முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s) அவர்கள் 04-11-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதியுள்ள கட்டுரை.)
17. மருத மரப்பட்டை, கருந்துளசி இலை இரண்டையும் போட்டுக் கசாயம் செய்து அருந்தி வந்தால், சீரற்ற இதயத் துடிப்பு சீராகும்.
(1394)
18. மருதம் பட்டை, செம்பருத்திப் பூக் கசாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய் குணமாகும்.
(1464)
19. மருதம் பட்டை, சிற்றரத்தை, திப்பிலி, சுக்கு, ஆகியவற்றைச் சார்த்துக் கசாயம் வைத்து 48 நாள் அருந்தி வந்தால், இரைப்பிருமல் குணமாகும். (1465)
20. மருதம் பட்டை, நாவல் பட்டை, ஆலம் விழுது கசாயம் 48 நாள் சாப்பிட்டு வந்தால் மதுமேகம் (நீரிழிவு) தீரும். (1466)
21. மருதம் பட்டைத் தூள், கரிசலாங்கண்ணித் தூள் இரண்டும் சேர்நத கலவை ஒரு கிராம் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.
(1467)
22. மருதம் பட்டைப் பொடி, ஆடாதொடைப் பொடி தலா அரைத் தேக்கரண்டி எடுத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வந்தால் நுரையீரல் புண் ஆறும்.
(1479)
23. மருத மர இலைகளைப் பறித்து அரைத்து ஒரு கிராம் எடுத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, பித்த வெடிப்பு ஆகியவை குணமாகும்.
(1480)
24. மருதமரத்தின் நிழலில் மருத மரக் காற்றுப் படும்படி நடந்தால் மாரடைப்பு வராது. (1901)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
===================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி )14]
{28-05-2021}
===================================================
மருதம் காய் |
மருதம் பூ |
மருதம் இலை |
மருதம் மரம் |
மருதம் மரப் பட்டை |
மருதம் இலையும் பூவும் |