இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 27 மே, 2021

மகிழம் (மகிழமரம்)

 

        மூலிகைப் பெயர்................................................மகிழம்

        மாற்றுப் பெயர்..................................................வகுளம்

        தாவரவியல் பெயர்............................Mimusops elengi

        ஆங்கிலப் பெயர்......................................Spanish cherry

 

==========================================================

         

 

01.      மகிழ மரத்தின் இலைகலைப் பறித்து வந்து நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால், பல் நோய் எதுவும் வராது.  (238)   பல் நோய் எதுவும் இருந்தால் அவை நீங்கும்.  (1416)     

 

02.      மகிழ மரத்தின் பிஞ்சு இலைகளை  வாயில் போட்டு மென்று   சாப்பிட்டு, சுடு நீரால் வாய் கொப்பளித்து வந்தால் ஆடும் பல்கூட ஆடாது.  (249)      

 

03.      மகிழம் பூவை நீர் விட்டுக் காய்ச்சி, அந்த நீரை ஒரு தம்ளர் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மை, வீரிய உணர்வு உண்டாகும்.  (514)  

 

04.      மகிழங்காயை மென்று அடக்கி வைத்திருந்து சற்று நேரம் கழித்து துப்பிவிட்டால், பல் ஆடுதல் சரியாகி உறுதி பெறும்.  (264) (1417)

 

05.      மகிழம் பழத்தின் மேல் பட்டையை பொடியாக்கி பற்பொடி போல் பல் துலக்கி வந்தால் கடுமையான பல்வலி கூட மறையும்.  (245)

 

06.      மகிழம் பழ விதைப் பருப்பை பொடி செய்து 5 கிராம் எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்.  (1452)  மலக் கட்டு, நஞ்சு தீரும்.  (1487)

 

07.      மகிழமரப் பட்டையை எடுத்து சிதைத்து, கசாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண் ஆறும்.  (1375)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )13]

{27-05-2021} 

===========================================================

மகிழம்பூ


மகிழங்காய்

மகிழமரம்


மகிழம்பூ

மகிழம்பூ

மகிழம்பூ