மூலிகைப் பெயர்................................பொன்னாவாரை
மாற்றுப் பெயர்கள்.....................தகரை, பேயாவாரை
தாவரவியல் பெயர்...........................
ஆங்கிலப் பெயர்........................................
===================================================
01. பொன்னாவாரை குறுஞ் செடி வகையைச் சேர்ந்தது .எதிர் அடுக்கில் அமைந்த இலைக் கொத்துகளை உடைய செடி. இலைகள் நடுவில் அகலமாகவும், நுனியில் கூர்மையாகவும் இருக்கும்.
02. பொன்னாவாரையில் பூக்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். இப்பூக்கள் ஆவாரம் பூக்கள்
போன்றே மஞ்சள் நிறத்தில் இருப்பதால் பொன்னாவாரை என்ற பெயரைப் பெற்று உள்ளது இச்செடி. .
03. பொன்னாவாரைக் காய்கள் சுமார் 15 செ.மீ நீளம் இருக்கும். காய்களுக்குள் விதைகள் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டது போல் அமைந்திருக்கும்.
04. பொன்னாவாரை வேரை எடுத்து எலுமிச்சம் பழச் சாறு விட்டு அரைத்துப் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும். (993)
05. பொன்னாவாரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் வைத்துக் குடித்து வந்தால் பித்த பாண்டு குணமாகும். (1507)
06. பொன்னாவாரை இலை, பொன்னாவாரை விதை சம அளவு எடுத்து அரைத்து ஒரு நெல்லிக் காயளவு வெந்நீரில் சாப்பிட்டால் (சிரமமின்றி) சுகபேதியாகும். வயிறும்
சுத்தமாகும். (386)(1500)
07. பொன்னாவாரை இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் சொறி சிரங்கு மறையும். (456)
08. பொன்னாவாரைக் கீரையை சமைத்து உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் அளவுக்கு அதிகமாக இருக்கும் உடம்பு குறைந்து (எடை குறைந்து)
நலம் பெறலாம். (1058) (1306)
09. பொன்னாவாரை விதையை பசும்பால் விட்டு மைய அரைத்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும். ((146) (153)
10. பொன்னாவாரை விதைகளை எடுத்து மைய அரைத்து, சிறு நெல்லிக் காயளவு குளிர்ந்த நீருடன் கலந்து உள்ளுக்கு அருந்தினால் அசதி நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும். (785)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
======================================================
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி )13]
{27-05-2021}
பொன்னாவாரை |
பொன்னாவாரை |
பொன்னாவாரை |