இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 26 மே, 2021

பூண்டு

 

       மூலிகைப் பெயர்.....................................................பூண்டு

       மாற்றுப் பெயர்கள்..............உள்ளி, உள்ளிப் பூண்டு

        ...................................................................வெள்ளை உள்ளி

       தாவரவியல் பெயர்..................................Allium sativum.

       ஆங்கிலப்பெயர்......................................................GARLIC

======================================================

 

01.  பூண்டுப்பல், பெருங்காயம், கற்பூரம் ஆகியவற்றை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தினசரி மூன்று வேளை இரண்டு சொட்டு காதில் விட்டு வந்தால் எப்படிப்பட்ட காது வலியும் குறையும்.  (62)

 

02.  பூண்டுப்பல், வெற்றிலைக் காம்பு, சுட்ட வசம்பு, திப்பிலி ஆகியவற்றை சம அளவு எடுத்து வெண்ணையில் அரைத்து உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை நீங்கும்.  (113)

 

03.  பூண்டுப்பல், ஓமம், சுட்ட வசம்பு ஆகியவை சம அளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் சன்னி குணமாகும்.  (167)

 

04.  பூண்டுப்பல் சாறு, வெற்றிலைச் சாறு இரண்டும் கலந்து தடவி வந்தால் எச்சிற் புண் குணமாகும்.  (211) (1674)

 

05.  பூண்டுப் பல் சாறு, இஞ்சிச் சாறு இரண்டும் கலந்து 15 மி.லி உள்ளுக்குக் கொடுத்தால் தீராத வாந்தியும் நிற்கும்.  (294)

 

06.  பூண்டுப்பல், உப்பு, இரண்டையும் எடுத்து இடித்து, சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் சுளுக்கு குணமாகும்.  (570)

 

07.  பூண்டுப் பற்கள் 5 அல்லது 6 எடுத்து, உரித்து பசும்பாலில் வேக வைத்து பாலையும் வெந்த பூண்டுப் பற்களையும் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை தீரும்.  (668) (1783)

 

08.  பூண்டு, கிராம்பு, வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்து பொடிப் பொடியாக அரிந்து தயிரில் போட்டு, சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து அத்துடன் சேர்த்துக் கலக்கி  பருகினால் வயிற்று உப்பிசம் தீரும். (700)

 

09.  பூண்டையும் துத்தி இலையையும் பொடிப் பொடியாக அரிந்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி பருக்களின் மீது தடவி வந்தால் முகப்பருக்கள்  நீங்கிவிடும்.  (830)

 

10.  பூண்டுப் பற்கள் ஓரிரண்டு எடுத்து நசுக்கி கடிவாயில்  அழுத்தித் தேய்த்து, அதையே கடிவாயிலும்  கட்டினால் வண்டு கடி, பூச்சிச் கடி   ஆகியவற்றால் தொந்தரவு இராது. (886) (1794)

 

11.  பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால், உடம்பில் தேவையற்ற கொழுப்பு குறையும்.  (1059)

 

12.  பூண்டுப் பற்களுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி தீரும்.   (1174)

 

13.  பூண்டுப் பற்களைச் சுட்டுச் சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் இதய நோய்க்கு நல்லது.   (1226)

 

14.  பூண்டுப் பற்களை உணவில் அதிகமாகச் சேர்த்து வந்தால் குடலில் உள்ள புழுக்கள் மடியும்.   (1250)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 ====================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை முகநூல்.

[தி.பி,2052,விடை(வைகாசி )12]

{26-05-2021} 

===================================================


பூண்டு

பூண்டு

பூண்டு

பூண்டு