இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 26 மே, 2021

புன்னை

           மூலிகைப் பெயர்...................................................புன்னை

        மாற்றுப் பெயர்கள்...............................................................

        தாவரவியல் பெயர்........CALOPHYLLUM INOPHYLLUM

        ஆங்கிலப் பெயர்..........................................LAURAL TREE

        சுவை...........................................................................கைப்பு

        தன்மை.....................................................................வெப்பம்

 

===================================================


01.  புன்னை மரத்தின் இலை, பூ, விதை, பட்டை மற்றும் எண்ணெய் ஆகியன மருத்துவப் பயன் உடையவை.

 

02.  புன்னை மரம்  சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பள பளப்பான இலைகளையும் வெண்மை நிறப் பூங் கொத்துகளையும், உருண்டையான உள் ஓடுள்ள சதைக் கனிகளையும் உடைய பசுமையான மரம்.

 

03.  புன்னை மரத்தை ஆங்கிலத்தில்  BALLNUT’  அல்லது LAURAL TREE என்று சொல்வார்கள்.

 

04.  புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசிவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும்.

 

05.  இது சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம்  ஆகியவைகளைக் குணப்படுத்தும்.

 

06.  புன்னைப் பூவை அரைத்துச் சிரங்கிற்குப் பற்றுப் போட்டு வந்தால் சிரங்கு விரைவில் ஆறும். (1482)

 

07.  புன்னை இலையை ஊற வைத்த நீரில் குளித்து வர மேகரணம், சொறி, சிரங்கு யாவும் மறையும்.  (457) (1483)

 

08.  புன்னைப் பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு காய்ச்சல் தீரும்.  (1484)

 

09.  புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம், முன் இசிவு, பின் இசிவு, கிருமி ரணம், சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும்.  (1486)

 

10.  புன்னை எண்ணெய் 10, 15 துளி சர்க்கரையில் கொடுத்து உப்பில்லா பத்தியம் இருக்க கொனேரியா என்ற வெள்ளை மேகரணம் தீரும்.

 

11.  புன்னை விதையை அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட முடக்கு வாதம், கீல்வாயு, வாதவலிகள் தீரும்.

 

12.  புன்னைமரப் பட்டையை உரித்து வந்து  குடிநீர் ( கசாயம் ) செய்து புண்களைக் கழுவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும். (1485)

 

13.  புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும் பட்டையை நிழலில் உலர்த்தி அரைத்துச் சூரணம் (பொடி) செய்து தினம் ஒரு வேளை கொடுக்க மூட்டுவலி, சொறி, சிரங்கு குஷ்டம், மேகம் ஆகியவை குணமாகும்.

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )12]

{26-05-2021} 

===================================================



புன்னைக்காய்



புன்னைமரம்

புன்னைப்பூ