இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 22 மே, 2021

தர்பூசணி

 

            மூலிகைப் பெயர் :..................................தர்பூசணி

            மாற்றுப் பெயர்கள் :-.....................குமட்டிப் பழம்

             தாவரவியல் பெயர் :-........ .CITRULLUS LANATUS

            ஆங்கிலப் பெயர்:-............................WATER MELON

==================================================

 

01.   தர்பூசணிப் பழத்தில் நிறைய நீர்ச் சத்தும், நார்ச் சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் A, C, B-1, B-5, B-6 போன்ற சத்துக்களும் உள்ளன. .(Harish)

 

02.   தர்பூசணிப் பழத்தைச் சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணியும். .(Harish)

 

03.   பழத்தில் நார்ச் சத்து மிகுதியாகக் காணப்படுவதால், மலக் கட்டு உள்ளவர்கள் இதனைச் சாப்பிட நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் செரிமானத்தைச் சீர் செய்யும். .(Harish)

 

04.   மிகுந்த உடல் உழைப்பாலும், அதீத உடற்பயிற்சியாலும் தசைகளுக்கு ஏற்படும் வேதனையை (Muscle Soreness) இந்தப் பழத்தையோ அல்லது பழச் சாற்றையோ அருந்தத் தீரும். .(Harish)

 

05.   கோலின் (Gholin) என்னும் சத்து தர்பூசணிப் பழத்தில் அதிகம் காணப்படுவதால், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். உடலில் கொழுப்பு உறிஞ்சுவதற்கு (Fat Absorption) துணை புரியும். .(Harish)

 

06.   தோலைப்  பாதுகாக்கவும், அழகாக வைத்திருக்கவும் உதவும். வைட்டமின்  தர்பூசணியில் உள்ளதால், சரும வறட்சி ஏற்படாமல் காக்கும். .(Harish)

 

07.   தர்பூசணி விதையில் (Lysine)  என்று சொல்லக் கூடிய அமினோ அமிலம் இருப்பதால், அவை இணைப்புத் திசுக்கள் உருவாகத் துணை புரியும். தர்பூசணி விதைகளைப் பொடித்து ஒன்று முதல் மூன்று கிராம் அளவு உட்கொண்டால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை குணமாகும். .(Harish)

 

08.   இதன் விதையில் மெக்னீஷியம் இருப்பதால், இதயப் பிரச்சினைகள் வராது. அதற்கு தர்பூசணி விதைப் பொடியுடன் யுடன் சீரகம் சேர்த்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதை அருந்துவதால் இரத்த அழுத்தம் சீராகும். .(Harish)

 

09.   தர்பூசணி விதைப் பொடியை 2 கிராம் எடுத்து, தண்ணீரில் கலந்து தினமும் அருந்தி வந்தால் கெட்ட கொழுப்பு (L.D.L.Cholosteral) உடலில் சேர்வதைத் தடுக்கும். காரணம் இதன் விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. .(Harish)

 

10.   தர்பூசணி விதைப் பொடியை 2 கிராம் அளவு பாலுடன் கலந்து தினமும் அருந்தி வந்தால், ஆண்மை பெருகும். .(Harish)

 

11.   தர்பூசணி  விதையையும் நெருஞ்சி முள்ளையும் சேர்த்துக் குடிநீர் செய்து  60 மி.லி இரு வேளை கொடுக்க, சிறுநீர் அதிகரித்து, சிறுநீரகக் கற்கள் கரையும். .(Harish)

 

12.   விதைப் பொடியை பாலில் வேக வைத்து வாரத்தில் மூன்று நாட்கள் அருந்துவதால், சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தீரும். .(Harish)

 

13.   தர்பூசணி விதை எண்ணெயை முகத்தில் தினமும் தடவிவர வறட்சி நீங்கும். .(Harish)

 

14.   செரியாமைக்குத் தர்பூசணிப் பழச் சதைப் பகுதியை நன்கு அரைத்து, வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்துத் தருவதால் குணமாகும். .(Harish)

 

15.   தர்பூசணியில் லைகோபின் (Lycopene) என்னும் சத்து இருப்பதால், தோல் சுருங்குவதைத் தடுக்கும்.(Harish)

 

16.   (ஆதாரம் :- வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்  மருத்துவமனை, முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D (s), அவர்கள் 22-04-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )08]

{22-05-2021} 

===================================================

தர்பூசணி



தர்பூசணிக் கொடி

தர்பூசணிக் கொடி

தர்பூசணிப் பழம்